தமிழ் சினிமாவுக்கு பல ஹிட் படங்களை கொடுத்த நடிகர் தான் விஷால். இவருடைய நடிப்பில் வெளியாகும் ஆக்சன், திரில்லர் படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது வெளியான மதகஜராஜா திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகின்றது.
நடிகர் விஷால் நடிப்பில் வெளியான தாமிரபரணி, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் அடித்தன. அதன் பின்பு ஒரு கட்டத்தில் விஷால் உடைய படங்கள் சரிவை சந்தித்தது. எனினும் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்திருந்தது. இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யாவும் நடித்திருந்தார்.
இதை தொடர்ந்து தற்போது கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து விஷால் - சுந்தர். சி கூட்டணியில் வெளியான மதகஜராஜா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் பெரிதாக ரசிகர்களை கவறாத நிலையில் இந்த படம் பார்ப்போரை வயிறு குலுங்க சிரிக்க வைத்துள்ளது.
இந்த நிலையில், மதகஜராஜாவின் வெற்றி விழாவில் விஷால் கொடுத்த பேட்டி வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறுகையில், நிலம் நடுக்கம் என்றாலே செய்திகளில் சிறிய நியூஸ் ஆகத்தான் வரும். ஆனால் விஷாலின் கை நடுங்கியது என்பது மிகப்பெரிய வைரலானது.
ஆனாலும் எனக்கு இதில் கிடைத்த நன்மை என்னவென்றால் என் மீது யார் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார்கள் என்பதை நான் அறிந்து கொண்டேன். அனைவரும் என்னை நலம் விசாரித்தார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் நடிகர் சங்க கட்டிடம் மார்ச் மாதத்திற்குள் கட்டி முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சங்க கட்டிடத்தை கட்டி முடித்த பிறகு அடுத்த நான்கு மாதத்தில் நிச்சயமாக எனது திருமணம் நடைபெறும் எனவும் தகவல் வழங்கியுள்ளார் விஷால்.
Listen News!