• Jan 18 2025

"உடல்நலன் எப்படி இருக்குனு டவுட் வந்தா எனக்கே ஒரு போன் பண்ணுங்க"கவலையுடன் பேசிய விஷால்

Mathumitha / 5 hours ago

Advertisement

Listen News!

சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலக்ஷ்மி மற்றும் பலர் நடித்துள்ள "மதகஜராஜா" திரைப்படம்  12 வருடங்களின் பின் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களிடையே வெகுவாக வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்துடன் இப்படம் வசூலில் மாபெரும் வெற்றியையும் குவித்துள்ளது. 


ரசிகர்கள் படத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் நிலையில் படக்குழு இன்று தனது வெற்றியை கொண்டாடுகிறது. 12 வருடங்களுக்குப் பிறகு இப்படம் வெளிவந்து ரசிகர்களுக்கு ஒரு உற்சாகமான அனுபவத்தை வழங்கியுள்ளதால் படக்குழு இப்போது திரையுலகில் பெரும் சாதனை படைத்துள்ளது.இந்த நிகழ்வில் விஷால் சுந்தர்சி உட்பட பலர் கலந்து சிறப்பித்துள்ளனர்.


குறித்த வெற்றி விழா மேடையில் விஷால் "என் உடல்நலன் எப்படி இருக்குனு டவுட் வந்தா எனக்கே ஒரு போன் பண்ணுங்க..நானே சொல்றேன் அப்புறம் விஷால் போதைக்கு அடிமை ஆகிட்டார் நரம்பு தளர்ச்சி போன்ற உங்களது கிரியேட்டிவிட்டி கதைகளை இயக்குநருக்கு சொல்லுங்க சினிமா சம்மந்தமா எதாவது கேக்கனும்னா நேரடியா அவங்க கிட்டையே கேளுங்க தேவையில்லாமல் வதந்திகளை பரப்பாதீங்க " என ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.


மற்றும் அவர் உடல்நலன் தொடர்பில் மிகவும் கவலையுடன் விசாரித்த ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement