• Dec 27 2024

காதல் மிகவும் தூய்மையானது,ஆனால் முட்டாள்தனமானது - தனது செல்லத்தின் பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாடிய அஞ்சலி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரை உலகின் மூலம், நடிகை அஞ்சலி தன்னுடைய திரையுலக வாழ்க்கையை துவங்கி இருந்தாலும்... இவரின் திறமையான நடிப்பை வெளிக்கொண்டு வந்தது என்னவோ தமிழ் சினிமா தான்.


இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான, 'கற்றது தமிழ்', திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிக்க துவங்கிய அஞ்சலி, இதைத் தொடர்ந்து நடித்த 'அங்காடி தெரு', 'தூங்கா நகரம்', 'எங்கேயும் எப்போதும்', 'வத்திக்குச்சி', 'இறைவி', போன்ற படங்கள் இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிக முக்கிய படங்களாக அமைந்தன.


இந்நிலையில் அஞ்சலி 'எங்கேயும் எப்போதும்' படத்தின் மூலம் தனக்கு நண்பராக அறிமுகமான ஜெய்யுடன் 'எனக்கு வாய்த்த அடிமைகள்', 'பலூன்' போன்ற படங்களில் தொடர்ந்து நடித்த போது இருவரும் காதலித்து வந்ததாக கூறப்பட்டது. 


சந்தேகத்திற்கு இடமான சில புகைப்படங்களையும் இருவரும் வெளியிட்ட நிலையில், பின்னர் அந்த காதல் தோல்வியில் முடிந்ததாக கூறப்பட்டது. தற்பொழுது அஞ்சலி தனது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்.


இந்த நிலையில் இவர் தான் வளர்க்கும் செல்லப்பிராணியான நாய்க்குட்டி போலோவின் 4வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் அவை வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement