• Dec 26 2024

’விடாமுயற்சி’ படப்பிடிப்பை நிறுத்த சொன்ன லைகா.. நயன்தாரா சாபம் தான் காரணமோ?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

பிரபல தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் ஒரே நேரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'வேட்டையன்', உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் 'இந்தியன் 2', அஜித் நடித்து வரும் 'விடாமுயற்சி' மற்றும் மோகன்லால் நடித்து வரும்எம்பிரான்ஆகிய படங்களை தயாரித்து வருகிறது.

ஒரே நேரத்தில் நான்கு பிரபல நடிகர்களின் படங்கள் தயாரிக்கப்பட்டு வருவதை அடுத்து அந்நிறுவனம் பொருளாதார ரீதியில் சிக்கலை எதிர் கொண்டது என்றும் அதனால் ஒரு சில படங்களின் படப்பிடிப்பு நடைபெறவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அந்நிறுவனம் அஜித்தின்விடாமுயற்சிபடப்பிடிப்பை தற்போதைக்கு நிறுத்தி வைக்க கூறியதாகவும் 'வேட்டையன்' படத்தை விறுவிறுப்பாக முடித்து அந்த படம் ரிலீஸ் ஆன பிறகு அதிலிருந்து வரும் பணத்தை வைத்துவிடாமுயற்சிபடத்தின் படப்பிடிப்பை நடத்தி கொள்ளலாம் என்று கூறியதாக தெரிகிறது.



அதேபோல் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பையும் நிறுத்தச் சொன்னதாக கூறிவிட்டதால் தான் ஷங்கர் தற்போதுகேம் சேஞ்சர்படத்தின் படப்பிடிப்புக்கு சென்று விட்டதாக தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில் மோகன்லாலின்எம்பிரான்படத்தின் படப்பிடிப்புக்கு பெரிய அளவில் செலவில்லை என்பதால் அந்த படத்தை தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளதாகவும் இப்போதைக்குவிடாமுயற்சிமற்றும்இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது.

அஜித்தின் அடுத்த படத்தை முதலில் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்த நிலையில் அதன் பின் திடீரென இயக்குனர் மாற்றப்பட்டார். இதனால் நயன்தாராவின் சாபம் தான்விடாமுயற்சிபடத்திற்கு அடுத்தடுத்து சிக்கல்கள் வருவதற்கு காரணம் என கூறப்படுகிறது. போகிற போக்கை பார்த்தால் பார்த்தால்விடாமுயற்சிஇந்த ஆண்டு கூட வெளியாவது சந்தேகம் என்று தான் கூறப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement