• Dec 26 2024

மதகஜ ராஜா’ ரிலீஸ் ஆக அம்பானி தான் காரணமா? மகிழ்ச்சியில் சுந்தர் சி - விஷால்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

விஷால் நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் உருவான ’மதகத ராஜா’ என்ற திரைப்படம் கடந்த 10 ஆண்டுக்கு மேலாக ரிலீசாகாமல் இருக்கும் நிலையில் இந்த படம் செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இந்த நிலையில் இந்த படம் ரிலீஸ் ஆக ஒரு வகையில் அம்பானி தான் காரணம் என்று திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

விஷால், வரலட்சுமி, அஞ்சலி நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில், விஜய் ஆண்டனி இசையில் உருவான திரைப்படம் ’மதகஜராஜா’. இந்த படம் கடந்த 2013 ஆம் ஆண்டு ரிலீசுக்கு தயாரான நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது.



ஒரு கட்டத்தில் விஷால் இந்த படத்தின் அனைத்து கடன்களையும் நான் ஏற்றுக்கொள்கிறேன், என்னிடம் படத்தை கொடுங்கள் என்று கேட்டபோது கூட தயாரிப்பாளர் முடியாது என்று கூறிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தயாரித்தது ஜெமினி பிலிம் சர்க்யூட் என்ற நிறுவனம் என்பதும் இந்த நிறுவனம் வேறு சில படங்களை தயாரித்தும் ரிலீஸ் செய்ததால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக தான் ’மதகஜராஜா’ படத்திற்கு வாங்கிய கடனை அடைக்க முடியாமல் இருந்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடம் ஒன்று சென்னை வடபழனி பேருந்து நிலையம் அருகே உள்ளதாகவும், அந்த கட்டிடத்தை அம்பானி மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கி உள்ளதாகவும் தெரிகிறது. இதற்காக முதல் கட்டமாக 200 கோடி ரூபாய் கைமாறி உள்ளதாக கூறப்படும் நிலையில், இந்த பணத்தை வைத்து தான் தற்போது ’மதகஜராஜா’ படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

எது எப்படியோ, ’மதகஜராஜா’  ரிலீஸ் ஆக அம்பானியும் ஒரு காரணம் என்பதை அறிந்து சுந்தர் சி, விஷால் மகிழ்ச்சி அடைந்ததோடு, இந்த படம் இப்போது வந்தால் கூட வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக இருவரும்  நம்பிக்கை உடன் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement