• Dec 26 2024

விவாகரத்து அறிவிப்புக்கு மறுநாளே ஹர்திக்கை ஃபாலோ செய்த நடிகை.. அடுத்த காதலா?

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!


பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா தனது மனைவி நடாஷாவை விவாகரத்து செய்யப் போவதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட மறுநாளே அவரது சமூக வலைத்தள பக்கத்தை பிரபல நடிகை ஒருவர் ஃபாலோ செய்திருப்பதாகவும் அதேபோல் அந்த நடிகையும் ஹர்திக் சமூக வலைதள பக்கத்தை ஃபாலோ செய்திருப்பதாகவும் வெளிவந்திருக்கும் தகவலை அடுத்து இருவருக்கும் காதலா என்ற வதந்தி பரவி வருகிறது.

ஹர்திக் பாண்ட்யா - நடாஷா தம்பதிகள் அதிகாரப்பூர்வமாக பிரிவதாக சமீபத்தில் அறிவித்த நிலையில் இதுகுறித்து ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் இணையத்தில் பல்வேறு கருத்துக்கள் பதிவாகி இருந்தன.



இந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா சமீபத்தில் முகேஷ் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட போது நடிகை அனன்யா பாண்டே உடன் நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலானது. முதலில் இந்த வீடியோ சாதாரணமாகத்தான் முதலில் எடுத்துக் கொண்ட நிலையில் தற்போது திடீரென ஹர்திக் பாண்ட்யா மற்றும் அனன்யா பாண்டே ஆகிய இருவரும் இன்ஸ்டாகிராமில் ஒருவரை ஒருவர் ஃபாலோ செய்துனர்.

இதனை அடுத்து இருவருக்கும் ரகசிய காதலா? இந்த காதல் தொடருமா? என்று வதந்திகள் கிளம்ப தொடங்கிவிட்டன. ஆனால் ஹர்திக் பாண்ட்யா மற்றும் இருவரும் அனன்யா பாண்டே ஆகிய இருவரும் முகேஷ் அம்பானி வீட்டின் திருமணத்தில் கலந்து கொண்ட போது தான் நட்பு ஏற்பட்டதாகவும் இது வெறும் நட்பு மட்டும் தான் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த நட்பு காதலாக மாறுமா? திருமணம் வரை செல்லுமா? என்பதை எல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement