• Jun 07 2025

மீண்டும் தமிழுக்கு வரும் ‘பிரேமலு’ மமிதா பாஜூ.. நாயகன் இந்த பிரபலமா?

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள திரை உலகில் உருவான ‘பிரேமலு’ என்ற திரைப்படம் வெறும் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான நிலையில் இந்த படம் தென்னிந்தியா முழுவதும் வசூலை வாரி குவித்தது என்றும் 136 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. இவர் ஏற்கனவே தமிழில் ஜி.வி பிரகாஷ் நடித்த ‘ரிபெல்’ என்ற படத்தில் நடித்திருந்தாலும் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் ‘பிரேமலு’ படம் மூலம் தான் தமிழில் பிரபலமானார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க மமிதா பாஜூ ஒப்பந்தம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 

பிரபல இயக்குனர் சுதா கொங்கரா உதவியாளர் கீர்த்தீஸ்வரன் என்பவர் இயக்குனராக அறிமுகம் ஆகும் படத்தில் மமிதா பாஜூ நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் நாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிரதீப் ரங்கநாதன் தற்போது ’எல்ஐசி’ மற்றும் ’டிராகன்’ ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்த இரண்டு படங்களையும் முடித்தவுடன் அவர் கீர்த்தீஸ்வரன் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பாஜூ ஆகிய இருவரும் ஒரே படத்தில் இணைவதை அடுத்து இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த படமும் ஒரு துள்ளல் மிகுந்த காதல் கதையம்சம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. 

இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விரைவில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement