• Dec 26 2024

மணிரத்னம் என்னை சாகடித்து விட்டார்,அவரை நம்பவே கூடாது- பலநாள் உண்மையை உடைத்த பிரபலம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


மாணிக்கம் நாராயணன் ஸ்ரீரங்கத்து தேவதைகள், அலை ஓசை, வாழ்க்கை போன்ற சீரியல்களை நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான்  மாணிக்கம் நாராயணன். இது தவிர கூலி, மாண்புமிகு மாணவன், சீனு, வேட்டையாடு விளையாடு போன்ற ஹிட் படங்களையும் தயாரித்துள்ளார். தற்பொழுது தயாரிப்பிலிருந்து விலகி விட்டார்.

இந்த நிலையில் இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், சினிமா என்பது தெரியாத மோகம், இந்த படத்தில் ஜெயித்துவிடலாம், அடுத்த படத்தில் ஜெயித்துவிடலாம் என்று தான் பார்க்குமே தவிர அதில் இருக்கும் முள்ளை எப்போதும் பார்க்காது, அதில் இருக்கும் ரோஜா மட்டும் தான் கண்ணுக்கு தெரியும். 


என்னத்தான் கதை நன்றாக இருந்தாலும் படம் ஓடாது, தெரிந்த முகமாக இருந்தால் மட்டுமே படம் ஓடும், யாரோ ஒருவரை போட்டு படத்தை எடுத்துவிடலாம் என்று நினைத்தால் அந்த படம் ஓடாது, மக்களுக்கு பிடித்து இருந்தால் மட்டுமே படம் ஓடும் என்பதை அடிபட்டு தெரிந்து கொண்டேன். மேலும் விஜய்யை வைத்து நான் படம் எடுத்து இருக்கிறேன்,

 இப்போதும் அவருக்கு என் மீது மரியாதை உண்டு, இன்று என் நிலைமை சரியில்லை என்பதற்காக நான் அவரிடம் சென்று தேதி வேண்டும் என்று பிச்சை எடுக்க முடியாது. அஜித்தை விட விஜய் பெட்டர் என்று தான் சொல்லுவேன்.

தொடர்ந்து பேசிய அவர், மணிரத்னம் எத்தனை பெயரை காலி செய்தார் தெரியுமா என்னை சாக அடித்துவிட்டார். கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் பெரிய கஷ்டம். அவரிடம் பணம் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் பணம் இருக்கும் போது எனக்கு கொடுத்து உதவி செய்து இருக்கலாம். ஆனால் அதை அவர் செய்யவில்லை. 


 மணிரத்னம் எல்லாம் என்ன மனுஷன், முதலில் மனுஷனா இருங்க. எல்லாருக்கும் தான் காசு வேண்டும் அதற்காக இப்படியா. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தை படத்தை நான் ரிலீஸ் செய்வதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் தரமாட்டேன் என்று சொல்லிவிட்டார் என்று மணிரத்னம் குறித்து தனது வேதனையை வெளிப்படுத்தினார்.


Advertisement

Advertisement