• Dec 25 2024

ஜீவாவின் வீடியோவை நினைத்து பீதியில் மனோஜ்.? சந்தேகத்தில் பாயிண்டை பிடித்த முத்து

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசொட்டில், மீனாவுடன் கூட வேலை பார்ப்பவர்கள் விஜயாவிடம் ஒரு நாளைக்கு உங்க கை கால் இழுத்துச்சு என்றால் அதன் பிறகு மீனாதான் பார்க்கணும், மீனாட அருமை உங்களுக்கு தெரியல என்று மீனாவை பற்றி பெருமையாக பேச, விஜயா அவர்களை திட்டி விட்டு செல்கின்றார்.

இதை தொடர்ந்து முத்து சவாரிக்கு சென்ற இடத்தில் சவாரி வந்த நபரிடம் இருந்து போனை வாங்கி மீனாவுக்கு கால் பண்ணி கதைக்கின்றார். மேலும் தனக்கு நன்றாக ஞாபகம் உள்ளது. தான் சேர்ட் பாக்கெட்டில் தான் போனை வைத்திருந்தேன். அதை யாரோ எடுத்து விட்டார்கள் என்று மீனாவிடம் சொல்லுகின்றார்.

அதன் பின்பு மீனா சத்யாவை வரவழைத்து முத்துகாக ஒரு போனை வாங்குவதற்கு கடைக்கு செல்கின்றார். அங்கு சத்யாவின் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. இதனை பார்த்து கடையில் இருப்பது சத்யா தானே என பேசிக்கொள்கின்றார்கள்.


இதை அடுத்து வித்யாவும் ரோகினியிடம் சிட்டி வீடியோவை ரிலீஸ் பண்ணிட்டார் என்று காட்டுகின்றார். ரோகிணி சந்தோஷப்படுகிறார். மேலும் இதை வைத்து முத்து மீனாவ வெளியே அனுப்பி விடுவாங்க, ஸ்ருதியின்அம்மாவும் ஸ்ருதி, ரவியை கூட்டிப் போய்விடுவார்கள். அப்புறம் நானும் மனோஜூம் தான் இருப்போம் என்று சொல்லுகின்றார்.

மேலும் தான் சொன்ன மாதிரி அடித்து தருமாறு ஒரு பிரிண்ட் அவுட் எடுக்கின்றார். பிறகு நேரே மனோஜ் கடைக்கு சென்று, தனக்கு வழியில் ஒருவர் லெட்டர் தந்ததாக அதை கொடுக்கின்றார். அதை விரித்து பார்க்கும்போது 'உனது குடும்ப வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது' என்று எழுதி உள்ளது. அதை பார்த்த மனோஜ் நானும் ஜீவாவும் இருக்கிற வீடியோ இருக்கக் கூடாது என வேண்டிக் கொள்கின்றார்.

மனோஜ் போனில் பார்க்கும்போது சத்யாவின் வீடியோ வைரலாக இருந்தது. இதனால் இதை போய் விஜயாவிடம் சொல்லுமாறு ரோகிணியை அனுப்பி வைக்கின்றார். ரோகிணியும் போட்ட பிளான் படியே விஜயாவிடம் சென்று வீடியோவை காட்டுகின்றார். இதை பார்த்த விஜயா அதிர்ச்சி அடைகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement