• Dec 26 2024

அடித்துப் பிடித்து யூடியூபில் டிரென்டிங்கான மனோஜ் காதலி! ரோகிணி போட்ட பிளான்?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ஏனைய சீரியல்களின் பட்டியலில் முன்னிலையில் காணப்படுகிறது. இந்த சீரியல் தான் சன் டிவி சீரியலுடன் போட்டி போடும் அளவிற்கு டிரென்டிங்கில் உள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியலில் கடந்த வாரம் கனடா வேலை வேண்டுமென்று சாமியாரிடம் மனோஜ் சென்ற நிலையில், அவரை  பிச்சை எடுக்குமாறு சாமியார் கூறியிருந்தார். அதன்படி அவர் பிச்சை எடுக்க அதை பார்த்த மீனா முத்துவுக்கு போன் போட்டு சொல்கிறார்.

இதை தொடர்ந்து அங்கு வந்த முத்து, மனோஜ்க்கு பேசி வீட்டுக்கு கூட்டி வந்த நிலையில், விஜயாவும் அண்ணாமலையும் உன்னை நான் எப்படி வளர்த்தன் என கவலைப்படுகிறார்கள். வேறு வழி இன்றி தான் இவ்வாறு செய்தேன் என மனோஜ் பரிதாபமாக சொல்லியிருந்தார். மனோஜ் ஏற்கனவே காதலித்த ஜீவா என்பவரிடம் 27 லட்சம் ரூபாயை கொடுத்து  ஏமாந்து உள்ளார்.


தற்போது வெளியான ப்ரோமோவில்,  அந்த 27 லட்சம் ரூபாய் தான் இப்ப எங்களுக்கு இருக்கிற ஒரே வழி. அதனால் ஜீவாவை எப்படியாவது சரி தேடி கண்டுபிடிக்கணும் என ரோகிணி சொல்ல, மறுப்பக்கம் முத்துவின் காரில் மனோஜை ஏமாற்றிய ஜீவா கனடாவில் இருந்து வந்துள்ளதாக காட்டப்படுகிறது.

எனவே இந்த சீரியலில் இனிவரும் நாட்களில் மனோஜ் ஜீவாவிடம் இருந்து எப்படி பணத்தை வாங்கப் போகிறார் என்றும், ஜீவா கனடாவில் இருந்து வந்திருக்கேன் என்று சொன்னபடியால் முத்து அவரிடம் மனோஜ்க்கு வேலை வாங்கித் தருமாறு மாட்டிக் கொள்ளப்போறாரா என்றும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் தற்போது இன்றைய தினம் வெளியான சீரியல்களின் ப்ரோமோக்களில் சிறகடிக்க ஆசை சீரியல் தான்  யூடியூபில் நம்பர் ஒன் இடத்தில் டிரென்டிங்கில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி  உள்ளன.

இதே வேளை,  கடந்த வாரம் வெளியான ப்ரோமோவிலும் சிறகடிக்க ஆசை சீரியல் தான் நம்பர் ஒன் இடத்தில் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement