• Dec 26 2024

சூர்யா அரசியலுக்கு வந்து பல வருஷமாச்சா? புதிய குண்டை தூக்கிப்போட்ட RJ பாலாஜி

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட கங்குவா திரைப்படம் எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் தேதி ரிலீசுக்கு தயாராகியுள்ளது. தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் சூர்யா நடிக்கும் கங்குவா  படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதன் போது சூர்யா அரசியலுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது என ஆர் ஜே பாலாஜி தெரிவித்துள்ளார். தற்போது அவர் வழங்கிய பேட்டி வைரலாகி வருகின்றது.

அதன்படி அவர் கூறுகையில், நான் காலேஜ் படிக்கும் போது சூர்யா நடிப்பில் நான் பார்த்த முதலாவது படம் காக்க காக்க. அதன் பின்பு பிதாமகன், ஆயுத எழுத்து, கஜினி இந்த நான்கு படத்தையும் காலேஜில் படிக்கும் போது பார்த்தேன். இப்படி திரையில் பார்த்து வியந்த ஒருத்தர் தான் சூர்யா. தற்போது சூர்யாவின் 45 ஆவது படத்தை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றேன். அவர் என் கதையை கேட்டு என் மீது நம்பிக்கை வைத்ததால் தான் இது சாத்தியமானது.

d_i_a

போஸ்ட் வெங்கட் சார் சூர்யா அரசியலுக்கு வர வேண்டும் என்று சொன்னார். எனக்கு இதில் ஒரு ஒபினியன் இருக்கு. சூர்யாவின் ரசிகர் என்பதால் அதை இப்போது சொல்கின்றேன். அரசியல்வாதி என்பது தேர்தலில் நிற்பது மட்டுமல்ல, தெருவில் ஒரு மரம் விழுந்து அதை நான்கு பேராக சென்று எடுத்துப் போட்டால் தான் அவர் அரசியல்வாதி. மக்களுக்கு சின்ன சின்ன நல்லது செய்தாலும் அவர் அரசியல்வாதித்தான்.


அந்த வகையில் சூர்யா அரசியல்வாதியாக மாறி ரொம்ப வருஷம் ஆச்சு. அந்த அரசியலே உங்களுக்கு போதும் சார். மாற்றம் அறக்கட்டளை மூலமாக பலரை படிக்க வைத்து 25 வருடத்திற்கு முன்பே அரசியலுக்கு வந்துவிட்டார். இதுவே அவருக்கு போதுமானது என ஆர் ஜே பாலாஜி தெரிவித்து உள்ளார்.



Advertisement

Advertisement