• Dec 26 2024

பூவே பூச்சூடவா கொண்டை இப்படித்தான் கட்டுறதா? 40 ஆண்டுகளின் பின் நதியா வீடியோ

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

1984 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'நோக்கே தூரத்து கண்ணும் நாட்டு' என்ற படத்தின் தமிழ் ரீமேக் தான் பூவே பூச்சூடவா. இந்த படத்தில் பத்மினி பாட்டியாக நடித்திருந்தார். அதேபோல எவர்கிரீன் நாயகி என்று அழைக்கப்படும் நதியாவின் முதல் படமும் இதுவாகத்தான் காணப்பட்டது.

தமிழில் அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் பூவே பூச்சூடவா என்ற படம் இன்றைக்கும் பலரது நினைவிலும் பதிந்து  போன ஒரு படமாக காணப்படுகின்றது. அந்த படத்தில் பாட்டியாக நடித்த பத்மினி வெளியே கோபக்கார பாட்டியாகவும் உள்ளுக்குள் அன்புக்கு ஏங்குற எங்குபவராகவும் நடித்து அந்த படத்தில் அசத்திருப்பார்.

மேலும் இந்த படத்தில் நடிகை நதியா ஒரு சுட்டி பெண்ணாகவும் அனைவரையும் வம்பு இழுக்கும் பெண்ணாகவும் நடித்திருப்பார். இந்த படம் வெளியான பின்பு நதியாவின் ஸ்டைல், நதியா சேலை  என பல பொருட்கள் அவரின் பெயரில் அழைக்கப்பட்டன. அவர் பயன்படுத்திய சைக்கிளும் அந்தப் படம் வெளியான பின்பு  மிகவும் பிரபலமானது.


இந்த நிலையில், தற்போது தனது இன்ஸ்டா  பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்ட நதியா, அதில் பூவே பூச்சூடவா 40 ஆண்டுகளைக் கடந்து விட்டது. ஆனால் அந்தப் படத்தில் நான் கட்டிய கொண்டை பற்றி பலரும் கேட்டிருந்தார்கள் என்று சொல்லி பூவே பூச்சூடவா படத்தில் நதியா கட்டிய கொண்டையை தற்போது வீடியோவில் கட்டி காட்டியுள்ளார். இதோ குறித்த வீடியோ,

Advertisement

Advertisement