• Dec 25 2024

முத்துவுக்கு உச்சகட்ட பீதியை கொடுத்த ரோகிணி..! சூடுபிடிக்கும் ஆட்டம்.!

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களுள் ஒன்று தான் சிறகடிக்க ஆசை சீரியல். இந்த சீரியல் 500 எபிசோடுகளை கடந்து தற்போது சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருகின்றது.

சிறகடிக்க ஆசை சீரியல் விஜய் டிவி ஒளிபரப்பாகும் சீரியல்களுள்  ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படும் ஒரு சீரியலாக காணப்படுகிறது. இந்த சீரியல் தான் விஜய் டிவி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் காணப்படுகின்றது.

இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது.


அதில், காலையில் எழுந்து சவாரிக்குச் செல்ல தயாரான முத்து தனது போனை தேடுகின்றார். அதன்படி எல்லா இடத்திலும் முத்து போனை தேடி பார்த்த போதும் போனை காணவில்லை. அவருடன் சேர்ந்து மீனாவும் போனை தேடுகின்றார்.

முத்துவும் மீனாவும் போனை தேடிக் கொண்டு இருக்க ஒன்றுமே தெரியாதது போல ரோகிணி இவற்றைப் பார்த்து ரசித்துக் கொண்டு இருக்கின்றார். முத்து தனது போனுக்கு கால் பண்ணவும் அது சுவிட்ச் ஆஃப் என சொல்லுகின்றது. இதனால் முத்து டென்ஷன் ஆகி விடுகின்றார்.

எனவே முத்துவின் போனை ஒருவழியாக ரோகிணி எடுத்து விடுகின்றார். இனி அதில் இருக்கும் சத்யாவின் வீடியோவை சிட்டியிடம் கொடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதை பார்ப்போம்.

Advertisement

Advertisement