• Dec 25 2024

பறந்து வந்த முதல் விமர்சனம்! புஷ்பா 2 படம் எப்படி இருக்கு...!

subiththira / 4 weeks ago

Advertisement

Listen News!

புஷ்பா 1 பான் இந்தியன் திரைப்படமாக வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இப்படத்தில் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, சுனில், அனுஷ்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் ஒரே ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி இருந்தார்.


முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் தற்போது ரிலீஸுக்கு தயாராகியுள்ளது.  இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இப்படத்தில் சமந்தாவிற்கு பதிலாக ஸ்ரீ லீலா ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.


இந்த பாடலும் ரிலீசாகி வெளியாகிய நாளிலே 42 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.  இந்த நிலையில் புஷ்பா 2 தி ரூல் படத்தின் முதல் விமர்சனம் வெளிவந்துள்ளது. 


"இந்திய சினிமாவின் மிகப்பெரிய ப்ளாக் பஸ்டர் திரைப்படம் புஷ்பா 2" என இந்த முதல் விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அல்லு அர்ஜுன் மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இந்த  திரைப்படம் வருகிற டிசம்பர் 5ஆம்  திகதி வெளியாக இருக்கிறது. 

Advertisement

Advertisement