• Dec 27 2024

விஜய் அரசியல் குறித்து பயமாக இருக்கிறது.. அவருக்கு என் ஆதரவு இல்லை: விஷால் பட தயாரிப்பாளர்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் அவரது அரசியல் கட்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது என்பதும் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி அறிமுகம் செய்த இரண்டு நாட்களில் 50 லட்சம் உறுப்பினர்கள் அவரது கட்சியில் இணைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொதுமக்கள் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி திரையுலகிலும் விஜய்யின் அரசியல் கட்சிக்கு ஆதரவு குவிந்து வருவதாகவும் ஒரு சில திரை உலக நட்சத்திரங்களும் விஜய் கட்சியில் உறுப்பினராக இணைந்தனர் என்பதும் குறிப்பாக நாசர் மகன் ஃபைசல் விஜய் கட்சியில் உறுப்பினராக சேர்ந்த உறுப்பினர் அட்டை புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் விஷால் நடித்த ’மார்க் ஆண்டனி’ என்ற திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் வினோத் என்பவர் தனது சமூக வலைதளத்தில் விஜய் அரசியல் கட்சிக்கு தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்திய சிஏஏ என்ற சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டதை பார்த்த வினோத் ’நாட்டில் இன்றைய நிலைமைக்கு சிஏஏ சட்டம் என்பது அவசியமான ஒன்று, ஆனால் விஜய் அதை எதற்காக எதிர்க்கிறார் என்று எனக்கு தெரியவில்லை.

புஸ்ஸி ஆனந்த் போன்ற ஆட்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு அவர் எந்தவித ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்திவிட முடியாது. அவரது அரசியல் குறித்து எனக்கு கொஞ்சம் பயமாகவே இருக்கிறது. நடிகர் விஜய்க்கு எப்போதும் எனது முழு ஆதரவை தருவேன், ஆனால் அரசியல்வாதி விஜய் என்று வரும்போது அவருக்கும், அவரது கட்சிக்கும் எனது ஆதரவு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

அவரது பதிவு இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் அவரை கடுமையாக கண்டித்து வருகின்றனர். உங்கள் ஆதரவு எங்களுக்கு தேவை இல்லை, எங்களுக்கு மக்களின் ஆதரவு இருக்கிறது, நீங்கள் பாஜகவின் ஆதரவாளாக இருப்பதால் தான் விஜய்யை எதிர்க்கிறீர்கள் என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.


Advertisement

Advertisement