• Dec 26 2024

'செருப்ப கழட்டி அடிக்கணும்..' நிக்சனுக்கு எதிராக கொந்தளிக்கும் மக்கள்! தீயாய் பரவும் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. தற்போது, பிக் பாஸ் வீட்டில் நிக்சனுக்கும் அர்ச்சனாவுக்கு வலுத்த சண்டை தான் பேசுபொருளாகியுள்ளது.

கடந்த நாட்களாவே நிக்சனுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, அர்ச்சனா பொண்ணுங்கள பற்றி இவர் தப்பா பேசுவாரு என வினுஜா விசயத்தை மீண்டும் கையில் எடுத்து திட்டுகிறார்.

இதை தொடர்ந்து, பொண்ணா இது.. சும்மா இருந்து உப்புமா சாப்பிடாம அடுத்தவங்க வேலைல இருந்து தட்டுறது. நான் கலாய்க்க ஆரம்பிச்சா ஒக்காந்து மூணு நாளைக்கு அழுவ ... சும்மா வினுஜா .. வினுஜா ...வினுஜா ... என்டு கடுப்பாக்கிட்டு.. உன்ன சொருகிடுவன்... என மிரட்டியிருந்தார்.


பிக் பாஸ் வீட்டில் வைத்து நிக்சன் இவ்வாறு பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதைப்பற்றி நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில் கமல் சரமாரியாக கேள்விகளையும் தொடுத்திருந்தார்.

இந்த நிலையில், பிக் பாஸ் வீட்டிலுள்ள நிக்சனின் நடவடிக்கை தொடர்பில் பொது மக்களும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அதன்படி அவர்கள் கூறுகையில், நிக்சன் அப்படி பேசியது தப்பு தான். இதே வெளில வந்து பேசினா செருப்ப கழட்டி அடிப்பாங்க..சும்மா விடுவாங்களா அவன.. அங்க சுவிச் பாஸ் இருந்தா அதுல சொருவ சொல்லுங்க.. அதுல தான் சொருவ முடியும் நிக்சனால... என தமது கருத்துக்களை கூறியுள்ளனர்.


Advertisement

Advertisement