• Jun 03 2026

சங்கீதாவுடன் இருந்த அந்த நிமிடம்..மீண்டும் பேசுபொருளான விஜய்.! வைரலாகும் வீடியோ..

Aathira / 14 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தற்போது தமிழக முதலமைச்சராக திகழும் விஜய், அரசியலிலும் தொடர்ந்து பரபரப்பை கிளப்பி வருகிறார். ஆனால் அவரது பழைய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே இன்னும் அதே அளவிலான வரவேற்பைப் பெற்று வருகின்றன.

அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் பழைய தொலைக்காட்சி பேட்டி ஒன்றின் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளம் வயது விஜய் மிகவும் இயல்பாகவும் கலகலப்பாகவும் காணப்படுகிறார். மேலும், அவருடன் அவரது மனைவி சங்கீதாவும் இடம்பெற்றிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பேட்டியின் போது இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதைப் பார்த்த ரசிகர்கள், "இது பேட்டி மாதிரி இல்லை... ஒரு குடும்ப வ்ளாக் மாதிரி இருக்கு" என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, விஜய் மற்றும் சங்கீதா இணைந்து காணப்படும் அந்த அரிய காட்சிகள் ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை மீட்டுத் தந்துள்ளன.


இதற்கிடையில், விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த பல்வேறு வதந்திகளும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகின்றன. எனினும், அவை தொடர்பாக விஜய் அல்லது அவரது குடும்பத்தினர் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.

மற்றொரு பக்கம், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள கடைசி திரைப்படமாக கூறப்படும் ‘ஜனநாயகன்’ படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சில சிக்கல்களால் படத்தின் வெளியீடு தாமதமானாலும், படம் குறித்த எதிர்பார்ப்பு மட்டும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

Advertisement

Advertisement