• Dec 26 2024

முத்துவை கட்டிப்பிடித்து கதறியழுத மீனா.. குற்ற உணர்ச்சியில் அண்ணாமலை

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய தினம் வெளியான எபிசோட்டில், முத்து போலீஸ் ஸ்டேஷனில் காத்துக் கொண்டிருக்க அங்கு வந்த இன்ஸ்பெக்டரிடம் நான் குடிக்கவில்லை என்று சொல்ல, அவர் நம்பவில்லை மேலும் எதுவா இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளலாம் என அனுப்பி வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து சிட்டி சொன்ன டைமும் செல்வம் அண்ணன் சொன்ன டைமும் சரியா இருக்குது. சிட்டிக்கு எப்படி தெரியும் அவன் தான் ஏதோ பண்ணியிருக்கான் என்ற சந்தேகம் மீனாவுக்கு வருகிறது. இதனால் ஒயின்ஷாப் வருகிறார் மீனா. 

ஒயின் ஷாப்பில் நின்ற மீனாவை பார்த்தத யூடியூப் ஒருவர் அங்கு வந்து மீனாவை வீடியோ எடுக்க, மீனா அவரை அறைந்து விடுகிறார். மேலும் உங்களைப் போல ஆட்கள் பிரபலமடைய எங்கட வாழ்க்கை தான் கிடைத்ததா என அவரை விளாசி தள்ளுகிறார்.

மேலும் இன்னைக்கு என் புருஷன் பிரச்சனையில் மாட்டியிருக்கிறார். அவர் மேல எந்த தப்பும் இல்லை என்று நிரூபிக்கத்தான் இங்கு வந்திருக்கேன் என்று சொல்ல, அதையும்  அப்படியே ரெகார்ட் பண்ணுகிறார் அந்த யூடியூபர். அதற்கும் பதிலடி கொடுத்து அனுப்புகிறார் மீனா.

இதைத் தொடர்ந்து ஒயின் ஷாப் திறந்ததும் உள்ளே சென்று ஓனரை சந்தித்த மீனா, நடந்த விஷயத்தை சொல்லி என் புருஷன் தப்பு பண்ணலன்னு நிரூபிக்கணும் அதற்கு ஹெல்ப் பண்ணுங்க என்று அவரிடம் செஞ்சி கேட்டு சிசிடிவி ஆதாரங்களை பார்க்கிறார். அதில் முத்து குடிக்கவில்லை இந்த வேலையை சிட்டி தான் செய்தார் என்பது நிரூபணம் ஆகிறது.


அதன் பிறகு இந்த வீடியோவை ரவிக்கு அனுப்பச் சொல்லி ரவியை முத்துவின் கார் செட்டுக்கு வர சொல்லி மீனாவும் கிளம்பி செல்கிறார். அங்கு ரவி வந்ததும் என்னடா, என்ன நடந்த? எதுக்கு இங்க வந்து இருக்கீங்க வீட்ல ஏதாவது பிரச்சனையா என்று முத்து கேட்க, அண்ணி தான் இங்க வர சொன்னாங்க என்று ரவி சொல்லுகிறார்.

அங்கு வந்த மீனா ஓடி வந்து முத்துவை கட்டிப்பிடித்து என்னை மன்னிச்சிடுங்க, நீங்க எவ்வளவு சொல்லியும் நான் உங்களை நம்பவில்லை. நான் உங்களை நம்பி இருக்கணும் .ஆனா நான் உங்களை நம்பாம விட்டுட்டேன் என்று அவரை கட்டிப்பிடித்து அழுகிறார். அதன்பின் ரவி அண்ணி ஒயின் ஷாப் போய் நீ குடிக்கலன்னு வீடியோ ஆதாரத்தோடு நிரூபிச்சு இருக்காங்கன்னு சொல்லுகிறார்.

இதை அடுத்து முத்துவுக்கு வீடியோவை காட்டி முத்துவையும் பேச வைத்து அதையும் நினைத்து இன்டர்நெட்டில் வெளி விடுகின்றார்கள். மேலும் நான் குடிக்கல என் மேல சுமத்தப்பட்ட பழிய என் பொண்டாட்டி தான் நிரூபிச்சி இருக்கா என்று பேசி கண் கலங்குகிறார் முத்து.

இந்த வீடியோவை பார்த்து மீனாவின் அம்மாவும் கண்கலங்க, மறுபக்கம் அண்ணாமலைக்கும் விஷயம் தெரிந்து அவரும் வீடியோவை பார்த்து கண் கலங்குகிறார் இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement