• Jun 07 2025

47 வயதில் இந்த ஆட்டம் தேவையா? போய் புள்ளைய படிக்க வைங்க.. மீனாவுக்கு குவியும் கண்டனங்கள்..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை மீனாவுக்கு தற்போது 47 வயதாகும் நிலையில் அவர் ஐஸ்லாந்தில் ’புஷ்பா 2 பாடலுக்கு செம ஆட்டம் போட்டு உள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவை கலாய்த்து ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். 

ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சரத்குமார், விஜயகாந்த், அஜித், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த மீனா, கணவரின் மறைவுக்கு பிறகு சோகமாக இருந்த நிலையில் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வருகிறார். 

இந்த நிலையில் சமீபத்தில் அவர் ஐஸ்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தார். அங்கிருந்து கொண்டே எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோக்களுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்து வரும் நிலையில் சமீபத்தில் வெளியான ’புஷ்பா 2’ படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு அவர் ஐஸ்லாந்து ஐஸ் மண்ணில் செம ஆட்டம் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். 

இந்த வீடியோவுக்கு 47 வயதில் இந்த ஆட்டம் உங்களுக்கு தேவையா? போய் மகளை படிக்க வைத்து கல்யாணம் செய்து கொடுப்பதில் கவனம் செலுத்துங்கள், வயதுக்கு ஏற்ற மாதிரி நடந்து கொள்ளுங்கள் என்று பலர் கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர். இருப்பினும் சிலர் மீனா இன்னும் இளமையாக தான் இருக்கிறார் என்றும் , அவர் கியூட்டாக இருக்கிறார் என்றும், அவரது டான்ஸ் அருமையாக இருக்கிறது என்றும் கமெண்ட்ஸ் பதிவாகி வருகிறது.



Advertisement

Advertisement