• Dec 27 2024

பயோ பிக் ஆகும் மைக்கல் ஜாக்சனின் வாழ்க்கை! ஹாலிவுட்டில் தயாராகும் பிரபலங்கள்

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

உலகளவில் மிகவும் அறியப்பட்ட ஒரு நபராக காணப்படுவர் தான் மைக்கல் ஜாக்சன். அந்த அளவிற்கு அவர் மிகப்பெரிய நடன கலைஞராகவும், பாடகராகவும் திகழ்ந்து வந்தார்.

அமெரிக்காவில் உள்ள இந்தியானா மாகாணத்தில் கடந்த 1958 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி பிறந்தவர் தான் மைக்கேல் ஜோசப் ஜாக்சன். அவரது குடும்பத்தில் ஜாக்சன் எட்டாவது குழந்தை. 

மிகவும் சாதாரண வாழ்க்கை வாழ்ந்து வந்த மைக்கல் ஜாக்சன், இன்று உலகமே போற்றும் மாபெரும் கலைஞனாக மாறியுள்ளார். அதற்கு அவருடைய நடனம் தான் முக்கிய காரணம்.


மைக்கேல் ஜாக்சனுக்கு ஆறு வயது இருக்கும் பொழுது அவருடைய தந்தை ஆரம்பித்த ஒரு பேண்டில் இணைந்து பாடல்களை பாட ஆரம்பித்தார். சிறுவயதிலிருந்தே அவருடைய உருவத்திற்காகவும், நிறத்திற்காகவும் பெரிய அளவில் உருவ கேலி செய்யப்பட்டவர் மைக்கேல் ஜாக்சன்

1975 ஆம் ஆண்டு அவருக்கு கிடைத்த ஒரு மாபெரும் வாய்ப்பு மைக்கேல் ஜாக்சன் யார் என்பதை உலகறியச் செய்தது. 1977 ஆம் ஆண்டு மைக்கேல் ஜாக்சன் நியூயார்க் நகருக்கு குடி பெயர்ந்தார். அதன் பிறகு தான் அவருடைய பிரபலமான பல பாடல்கள் அரங்கேறியது. 


1980களின் முற்பகுதியில் இருந்து இந்த உலகமே மைக்கேல் ஜாக்சனின் நடனத்திற்கு அடிமையாகஆரம்பித்தது.. 

எனினும், கடந்த 2009 ஆம் ஆண்டு லண்டன் நகரில் இடம்பெற்ற மாபெரும் கச்சேரியில் பங்கேற்று திரும்பிய போது ஜூன் 25. 2009 அன்று மாரடைப்பு காரணமாக காலமானார்.


இந்நிலையில்,  பல ஆண்டுகள் கழித்து அவருடைய பயோ பிக் ஒன்று தற்போது உருவாக உள்ளது ஹாலிவுட்டில் உள்ள பல முக்கிய பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். 

மேலும் மைக்கேல் ஜாக்சன் அவர்களுடைய உறவினரான ஜாபர் ஜாக்சன் என்பவர் தான் மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரம் ஏற்று அதில் நடிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement