கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள திரைப்படம் தான் காதலிக்க நேரமில்லை. இந்த படத்தில் வினய், யோகி பாபு, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இதற்கு ஏ. ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
காதலிக்க நேரமில்லை படத்தின் டிரைலர் நேற்றைய தினம் வெளியான நிலையில், அந்த ட்ரெய்லரில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு முழு நீள கதையில் ஜெயம் ரவி நடித்துள்ளார். ஆரம்பத்திலேயே தான் கர்ப்பமாக இருப்பதாக பெற்றோருக்கு குண்டை தூக்கிப் போடுகின்றார் நித்தியா மேனன்.
இன்றைய இளம் தலைமுறையினரை கவரக்கூடிய வசனங்களும் காட்சிகளும் குறித்த டெய்லரில் இடம் பெற்றுள்ளன. மேலும் முக்கோண காதலைப் பற்றி பேசிய படமாகவும் இந்த படம் இருக்கலாம். இந்த படத்தில் இடம்பெற்ற என்னை இழு இழு இழுக்குதடி என்ற பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
காதலிக்க நேரமில்லை படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்றைய தினம் நடைபெற்ற நிலையில், இதன் போது ஜெயம் ரவி, நித்யா மேனன், மிஷ்கின் என பலர் கலந்துள்ளார்கள்.
இந்த நிலையில், குறித்த இசை வெளியீட்டு விழாவில் நித்தியா மேனனின் கைகளில் மிஷ்கின் முத்தம் கொடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ வெளியாகி வைரலாகி உள்ளது.
Listen News!