• Dec 27 2024

மிஸ் வேர்ல்ட் 2024.. உலக அழகி பட்டத்தை வென்றது யார் தெரியுமா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

71 வது உலக அழகி போட்டி இந்த முறை இந்தியாவில் நடைபெற்றது. இதன் காரணமாக இந்தியா சார்பில் போட்டியிடும் சினி ஷெட்டி தேர்வார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் கடைசி சுற்றுக்கு அவர் தகுதியாகவில்லை. 130 நாடுகளில் இருந்து அழகிகள் போட்டியிட்ட நிலையில் உலக அழகி 2024 என்கின்ற உன்னதமான பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய அழகியொருவர் தட்டிச் சென்றுள்ளார்.

அந்த வகையில், மும்பை ஜியோ கன்வென்ஷன் சென்டரில் நேற்று நடைபெற்ற 71 வது உலக அளவில் போட்டியில் செக் குடியரசை  சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா உலக அழகி பட்டத்தை பெற்று மகுடம் சூடியுள்ளார்.


இறுதியாக வந்த எட்டு பேரில் இந்தியாவின் சினி செட்டி இருந்த நிலையில், அவர் கடைசி சுற்றுக்கு தேர்வாகி உலக அழகி பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கடைசி சுற்றுக்கு முன்னேறவில்லை.


இவ்வாறு முதலாவது இடத்தை கிறிஸ்டினா தட்டி சென்ற நிலையில், இரண்டாவது இடத்தை லெபனான் அழகி ஆன யாஸ்மினா ஸைத்தூன் வென்றார். அவருக்கு உலக ஆசியா பட்டமும் கிடைத்தது .

Advertisement

Advertisement