மலையாள நடிகையான அமலா பாலுக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது தமிழ் சினிமா தான். இவர் மலையாளத்தில் வெளியான 'நீலத்தாமரா' படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்பு தமிழில் 'வீரசேகரன்' என்ற படத்தில் நடித்தார். ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடித்த சிந்து சமவெளி படத்தில் மூலம் சர்ச்சை நாயகியாகவே உருவெடுத்தார்.
இதைத்தொடர்ந்து அமலாபால் நடிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா திரைப்படம் அமலாபால் மீது உள்ள அத்தனை சர்ச்சைகளையும் நீக்கியது. இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய சாதனை படைத்தது. அமலா பாலின் கேரியரிலும் சிறந்த படமாக காணப்படுகிறது.
d_i_a
2014 ஆம் ஆண்டு பிரபல இயக்குனரான ஏ.எல் விஜயை காதலித்து திருமணம் செய்தார். ஆனால் இவர்களுடைய திருமண வாழ்க்கை மூன்று ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது. அதன் பின்பு மீண்டும் சினிமா துறையில் கவனம் செலுத்தி வந்தார் அமலா பால்.
கடந்த ஆண்டு அமலா பாலின் நண்பரான ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் திருமணத்தின் போது மூன்று மாதம் கர்ப்பமாக இருந்ததாக கூறப்பட்டது. அதன் பின்பு அமலா பாலுக்கு அழகிய ஆண் குழந்தையும் பிறந்தது. இதன்போது அமலா பால் தனது குழந்தை, கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.
இந்த நிலையில், பொங்கலுக்கு வாழ்த்து சொல்லும் வகையில் தனது மகனுடன் க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அமலா பால். தற்போது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருவதோடு அதில் அம்மாவையும் பையனையும் பார்த்து ரசிகர்கள் கண் வைத்து வருகின்றார்கள். குறித்த புகைப்படங்கள் இதோ..,
Listen News!