• Dec 27 2024

அடப்பாவிகளா.. இதுவும் காப்பியா? முகேஷ் அம்பானி மருமகள் ஸ்பீச் வீடியோ வைரல்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

பொதுவாக ஹாலிவுட் திரைப்படங்களில் உள்ள காட்சிகள், கதைகள் ஆகியவற்றை காப்பியடித்து பிற மொழி திரைப்படங்களில் சேர்ப்பது என்பது வழக்கமாக இருந்து வருகிறது. ஆனால் சமீபத்தில் நடந்த முகேஷ் அம்பானி மகனின் திருமணத்தில் அவரது மருமகள் ஆற்றிய திருமண உரை ஹாலிவுட் படத்திலிருந்து காப்பி அடிக்கப்பட்ட வசனம் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நெட்டிசன்கள் இந்த வீடியோவுக்கு கிண்டல் செய்து கமெண்ட்ஸ் கலை பதிவு செய்து வருகின்றனர்.

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி சமீபத்தில் தொழிலதிபர் ராதிகா மெர்சன்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிகவும் பிரமாண்டமாக நடந்தது என்பதும் பேஸ்புக் நிறுவனர் மார்க் உட்பட உலகின் பல விவிஐபிகள் இந்த திருமண விழாவுக்கு வருகை தந்திருந்தார்கள் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த திருமண விழாவின் போது மணமக்கள் உரையாற்றினர் என்பதும் குறிப்பாக ஆனந்த் அம்பானியின் உரை நெகிழ வைக்கும் அளவுக்கு இருந்தது என்பதும் இந்த திருமண வீடியோவை பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவரது மனைவி ராதிகா மெர்ச்சண்ட் பேசிய  உரையில் இருக்கும் வசனம் அப்படியே ஹாலிவுட் திரைப்படம்ஷேல் வி டான்ஸ்என்ற திரைப்படத்தில் இருந்து காப்பியடித்த வசனம் என தெரிய வந்துள்ளது.

இந்த படத்தில் இடம்பெற்ற வசனமான  ’ஒரு திருமணத்தில் நல்லது கெட்டது என எல்லாவற்றையும் பற்றி அக்கறை எடுத்துக் கொள்வதாக ஒருவருக்கு உறுதி அளிக்கிறீர்கள், உங்கள் இணையிடம் நீங்கள் அவரது வாழ்க்கைக்கு சாட்சி அளிப்பதாக உறுதி அளிக்கிறீர்கள்என்ற வசனம் அப்படியே ஒரு வார்த்தை கூட மாறாமல்  ‘ஷேல் வி டான்ஸ்என்ற திரைப்படத்தில் இடம் பெற்று இருந்தது. இந்த வசனத்தை தான் அப்படியே மனப்பாடம் செய்து ராதிகா மெர்ச்சண்ட் பேசி இருப்பது பேசி இருப்பதை நெட்டிசன்கள் குறிப்பிட்டு கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.




Advertisement

Advertisement