• Dec 26 2024

முத்துவும் எவளோ தான் பொறுமையா இருப்பாப்ல..! ஹோட்டலில் மனோஜை லெப்ட் ரைட் வாங்கிய பார்க் ஃப்ரெண்ட்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்றுதான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், சத்யாவுக்கு மீனாவின் அம்மா சூப் கொடுக்கிறார். இதன் போது முத்து இப்படி செய்திட்டார் என அவர் அழுது இருக்கிறார்.

அந்த நேரத்தில் அங்கு அண்ணாமலை வருகிறார். சத்யாவை நலம் விசாரித்துவிட்டு மீனாவின் அம்மாவுக்கும் ஆறுதல் கூறுகிறார்.

சத்யாவிடம் உனக்கும் முத்துவுக்கும் வேறு ஏதும் பிரச்சினை இருக்கா என்று கேட்க, இல்லை என்று சொல்கிறார். மீனாவின் அம்மாவும் முத்து இப்படி செய்வார் என நினைக்கல, அவரை மூத்த பிள்ளை போல தான் பாத்தன், இப்போ மீனா வாழ்க்கையை நினைச்சா தான் பயமா இருக்கு, அந்த வீட்டுல மீனா பாதுகாப்பாக இருப்பாளோ தெரியா, முத்து ஏதும் பண்ணிடுவாரோ என பயமா இருக்கு என அண்ணாமலையிடம் கொட்டி தீர்க்கிறார்.


அதற்கு அண்ணாமலை, முத்து செய்தது தப்பு தான் நான் அவனுக்காக மன்னிப்பு கேக்கிறன் என்று சொல்லி,சத்யா செலவுக்கு வச்சு இருக்குமாறு கொஞ்சம் காசு கொடுக்க, அதை வேண்டாம் என்று சொல்கிறார் மீனாவின் அம்மா.

மறுபக்கம், மனோஜ் வேலை செய்யும் இடத்திற்கு அவருடன் பார்க்கில் இருந்த நபர் அங்கு அவரை பார்ப்பதற்கு செல்கிறார். அங்கு, அவர் பார்க்கில் இருக்கும் போது வாங்கிய கடனை தருமாறு கேட்கிறார். அதற்கு இன்னும் சம்பளம் வரல, வந்ததும் தாரேன் என மனோஜ் சமாளிக்க, ஹோட்டலில் இருந்து நல்லா சாப்பிட்டு, தனது மனைவிக்கும் கட்டி எடுக்கிறார். அந்த பில்லை மனோஜ் தலையில் கட்டுகிறார்.

இன்னொரு பக்கம், அண்ணாமலை வீட்டில் வந்து படுத்து இருக்க, விஜயா மீனா வீட்டிற்கு கொடுத்த காசு பற்றி கேட்க, அவங்க ஒரு ரூபா கூட வாங்கல என பதிலடி கொடுக்கிறார் அண்ணாமலை. எனினும், அவ தான் இப்போ பூக்கடைல நல்லா சம்பாதிக்கிறாளே என சொல்கிறார் விஜயா.

இதை தொடர்ந்து முத்து வீட்டிற்கு வர, அண்ணாமலை அவரை தனியாக கூட்டிக் கொண்டு போய் பேசுகிறார். அதை பார்த்து, ஏன் டி அவங்க தனியா போறாங்க என விஜயா கேட்க, அத மாமாக்கிட்டையே கேளுங்க என சொல்கிறார் மீனா. இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement