சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், வித்யாவுடன் ரோகிணி சண்டை போட்டதோடு மட்டுமில்லாமல் இனி உன்னுடைய பிரண்ட்ஷிப் தேவை இல்லை என்று சொல்லுகின்றார். இதை கேட்ட வித்யாவும் உன்னுடைய புருஷன், அவங்க குடும்பத்தையே இப்படி ஏமாத்திர நீயும் எனக்கு வேண்டாம் என்று இருவரும் தங்களுடைய பிரண்ட்ஷிப்பை முறித்துக் கொள்ளுகின்றார்கள்.
இதை தொடர்ந்து போனை யார் எடுத்திருப்பார் என்று மீனா யோசிக்க, இது கட்டாயம் ரோகிணியின் வேலையாகத்தான் இருக்கும்.. அவ மேல தான் சந்தேகமா இருக்கிறது.. அப்படி இல்லை என்றால் வித்தியா எடுத்து இருப்பா என்று சொல்லுகின்றார். மேலும் தாத்தாவிடம் போட்டோவை காட்டி கேட்டால் தெரியும் என பிளான் போடுகிறார்.
ஆனால் வித்யாவின் போட்டோ இல்லையே.. நீ நாளைக்கு வித்யா வீட்டுக்கு சென்று வித்யாவின் போட்டோ ஒன்றை எடு என மீனாவுக்கு ஐடியா கொடுக்கின்றார். அதன்படி அடுத்த நாள் வித்யா வீட்டில் மீனாவை பின்தொடர்ந்த நபர், உங்களை இரண்டு நாள் காணவில்லை எங்கே போனீர்கள் என்று அவருடன் லவ் மூட்டில் பேசுகின்றார்.
அவர் போன பின்பு வித்யாவும் அவர் மீது காதல் வந்தது போல தனியாக இருந்து சிரிக்கிறார். அந்த நேரத்தில் மீனா அங்கு வர அவரிடம் எனக்கு லைஃப் பார்ட்னர் வேணும் என்றால் நான் எப்படி தேர்ந்தெடுப்பது என்று கேட்கின்றார்.
அதற்கு மீனா ஒரு நாள் ஃபுல்லா அவங்களுடைய போனை வாங்கி வைத்திருங்கள். அதில் வைத்து கண்டுபிடித்து விடலாம் என்று சொல்லுகின்றார். இதன் போது வித்யாவின் முகம் சிவக்கிறது என்று மீனா அவரை வளைத்து வளைத்து போட்டோ பிடிக்கின்றார்.
அதன் பின்பு வித்யாவின் புகைப்படத்தை முத்துவிடம் காட்ட அவர், அதனை தாத்தாவின் உறவினருக்கு அனுப்பி இந்த இரண்டு பெண்களின் யாரு போனை தவற விட்டார்கள் என்று கேட்டு சொல்லுங்கள் என சொல்லுகின்றார். ஆனால் அவர் தான் வேலை ஒன்றிற்காக வெளியூர் வந்துள்ளதாகவும் ஊருக்கு செல்ல இரண்டு நாள் ஆகும் அதன் பின்பு கேட்டு சொல்லுகின்றேன் என்று சொல்லுகின்றார்.
இறுதியில் ரோகினி படுத்திருக்கும் போது கனவில் மீனா பேய் உருவத்தில் வந்து முத்து ஃபோனை எடுத்தது நீ தானே.. சத்யாவின் வீடியோவை ரிலீஸ் பண்ணது நீதானே என அவரை வைத்து மிரட்டுவது போல கனவு கண்டு பதறுகிறார். இதை பார்த்த மனோஜ் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.. இதுதான் இன்றைய எபிசோட்..
Listen News!