• Dec 26 2024

நீருக்குள் ஜல்சா செய்யும் மைனா நந்தினி.. கணவனின் மார்பில் இப்படி ஒரு ரகசியமா?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

பிரபல சீரியல் நடிகை மைனா நந்தினி தனது கணவருடன் நீருக்குள் ஜாலியாக இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவில் கணவரின் மார்பில் இருக்கும் டாட்டூவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். 

விஜய் டிவியின் பல சீரியல்களில் நடித்தவர் மைனா நந்தினி என்பதும் குறிப்பாக ’அழகி’ ’அமுதா ஒரு ஆச்சரிய குறி’ ‘மருதாணி’ ’சரவணன் மீனாட்சி’ ’கல்யாணம் முதல் காதல் வரை’ ’சின்னத்தம்பி’ ’அரண்மனைக்கிளி’ ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். 

மேலும் அவர் சில திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் சமீபத்தில் வெளியான ’விக்ரம்’ ’விருமன்’ ‘சர்தார்’ ’பார்ட்னர்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.



இந்த நிலையில் மைனா  நந்தினி தனது நீண்ட நாள் காதலரான கார்த்திகேயன் என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் கார்த்திகேயன் எதிர்பாராத வகையில் காலமானார். இதையடுத்து 2019 ஆம் ஆண்டு அவர் நடிகர் யோகேஸ்வரனை மைனா நந்தினி திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

தனது கணவர் மற்றும் குழந்தையுடன் சந்தோஷமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மைனா நந்தினி அவ்வப்போது பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் தனது கணவருடன் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தில் இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். 

இந்த வீடியோவில் அவர் தண்ணீருக்குள் கணவருடன் ஜாலியாக இருக்கும் காட்சி உள்ள நிலையில் அவரது கணவர் மார்பில் மைனா நந்தினி டாட்டூ இருப்பதும் அதுமட்டுமின்றி மைனா நந்தினியின் முகத்தையும் அவர் டாட்டூ செய்திருப்பது தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து மைனா மீது அவர் கணவர் எந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கிறார் என்று அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.




Advertisement

Advertisement