• Jan 19 2025

பாட்டல் ராதா பட விழாவில் மிஷ்கினின் மூக்குடைத்த தொகுப்பாளினி.! ஒரே அசிங்கமா போச்சு..

Aathira / 2 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநராக காணப்படுபவர் இயக்குனர் மிஷ்கின். இவர் ஒரு சில  படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ட்ரெயின் படத்தை இயக்கி வருகின்றார்.

இந்த நிலையில், இயக்குநர் மிஷ்கின் பாட்டல் ராதா படத்தின் விழாவில் போது மேடையில் செய்த சேட்டைகளும் அவர் பேசிய விஷயங்களும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றன.

சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர்தான் மிஷ்கின். இந்த படம் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இதனால் முதலாவது படத்திலேயே நல்ல இயக்குனர் என்ற பெயரை பெற்றார்.

இதை தொடர்ந்து அஞ்சாதே, நந்தலாலா, யுத்தம் செய் உள்ளிட்ட  படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக அடையாளம் காணப்பட்டார். மேலும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு ஆகிய படங்கள் மிஷ்கினின் கேரியரிலையே முக்கிய படங்களாக காணப்பட்டது.


இதைத்தொடர்ந்து பிசாசு 2 திரைப்படம் இயக்கிய போதும் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இதற்கிடையில் துப்பறிவாளன் படத்தை இயக்கி விஷாலுக்கு ஒரு ஹிட் படத்தை கொடுத்தார். மேலும் சவரக்கத்தி, லியோ, மாவீரர் என வரிசையாக படங்களிலும் நடித்து வந்தார்.

இவ்வாறான நிலையிலையே பாட்டல் ராதா படத்தின் விழாவில் பா. ரஞ்சித், மிஷ்கின், வெற்றிமாறன், லிங்குசாமி ஆகியோர் கலந்துள்ள நிலையில், மேடையில் பேசிய தொகுப்பாளினியை தடுத்து நிறுத்தியுள்ளார் மிஷ்கின். 

ஆனாலும் குறித்த தொகுப்பாளினி 'உங்களை கூப்பிடல சார்..' பா. ரஞ்சித் சாரை கூப்பிட்டேன் என்று சொன்னதும் சோகத்துடன் மீண்டும் சென்று அமர்ந்து விடுகின்றார்.  

Advertisement

Advertisement