பிரபல நடிகையாக காணப்படும் நயன்தாரா தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் பாரிஸ் நாட்டுக்கு சென்று எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
2022 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்தார் நயன்தாரா. அதன் பின் நான்கே மாதங்களில் வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார். அந்த குழந்தைகளுக்கு உயிர், உலக் என வித்தியாசமாக பெயரும் வைத்தார்கள்.
இரட்டைக் குழந்தைகளுக்கு தாயான பிறகும் பல படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். தற்போது நயன்தாராவின் கைவசம் ராக்காயி, டாஸ்கிக், மண்ணாங்கட்டி, டியர் ஸ்டூடண்ட்ஸ், டெஸ்ட் ஆகிய திரைப்படங்கள் கைவசம் உள்ளன. அதில் டியர் ஸ்டுடென்ட் என்ற மலையாள படத்தில் நிவின் பாலிசி ஜோடியாக நடிக்கின்றார்.
மேலும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் இன்னும் ஒரு படத்தை இயக்குநர் ஹரி இயக்க உள்ளார். அதில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார் என்றும் தகவல் வெளியாக இருந்தது.
இந்த நிலையில், பாரிஸ் நாட்டுக்கு தனது கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் மகன்களுடன் சுற்றுலா சென்றுள்ளார் நயன்தாரா. இதன் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் உலகப் புகழ்பெற்ற பாரிஸ் ஈஃபிள் டவர் முன்பு தனது குடும்பத்தாருடன் ஜாலியாக நயன்தாரா எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் பார்த்த ரசிகர்கள் தமது லைக்குகளை அள்ளி வீசி வருகின்றார்கள்.
Listen News!