• Dec 26 2024

ஐட்டம் டான்ஸ் நடிகையுடன் உங்களுக்கு என்ன உறவு? நயன்தாராவை உரிமையை கண்டிக்கும் ரசிகர்கள்..!

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகில் ஐட்டம் பாடல்களுக்கு டான்ஸ் ஆடும் நடிகையுடன், நடிகை நயன்தாரா இணைந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ஐட்டம் டான்ஸ் ஆடுபவருடன் என்ன பழக்கம் என்று ரசிகர்கள் உரிமையோடு நயன்தாராவை கண்டித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 நடிகை நயன்தாரா தற்போது தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் துபாய் சென்றுள்ளார் என்பதும் அங்கு அவர் சுற்றி பார்க்கும் இடங்கள் குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் துபாயில் நடந்த பார்முலா ஒன் கார் ரேஸ் போட்டியை நயன்தாரா பார்க்க சென்றபோது அதே போட்டியை பார்க்க வந்த பிரபல பாலிவுட் ஐட்டம் டான்ஸ் நடிகை மலைக்கா அரோராவை  சந்தித்துள்ளார். இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் மலைக்கா அரோரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகை மலைக்கா அரோரா மணிரத்தினம் இயக்கியஉயிரேஎன்ற திரைப்படத்தில்தக்க தையா தையாஎன்ற பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார் என்பதும் அதேபோல் அவர் ஏராளமான பாலிவுட் படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடியிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 தற்போது அவர் 50 வயதில் இருக்கும் மலைக்கா அரோரா 38 வயது போனி கபூர் மகன் அர்ஜுன் கபூருடன் ரிலேஷன்ஷிப் வைத்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐட்டம் டான்ஸ்  நடிகை உடன் நீங்கள் எதற்காக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டீர்கள் என நடிகை நயன்தாராவை அவரது ரசிகர்கள் உரிமையுடன் கண்டித்து இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement