• Dec 26 2024

37 வயது நடிகருடன் ஜோடியாகும் குட்டி நந்தினி... யார் அந்த ஹீரோ? டென்ஷனாகிய நெட்டிசன்கள்!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தெய்வத்திருமகள் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் அவர்களுக்கு மகளாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை  சாரா அர்ஜூன். இவர் குழந்தை நச்சத்திரமாக அறிமுகமாகி தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.


மேலும் இயக்குனர் மணிரத்தினத்தின் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினின் இளமை பருவத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்த்திருப்பார். இன்று வரைக்கும் அவரின் அழகில் ரசிகர்கள் மயங்கி இருக்கிறார்கள். தற்போது இவர் நடிக்க இருக்கும் திரைப்படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.


நடிகை தீபிகா படுகோனேயின் கணவர் ரன்வீர் சிங் புதிதாக திரைப்படம் ஒன்றில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். அந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக சாரா நடிக்க இருகிறார். 37 வயதான ரன்வீர் சிங்கிற்கு 20 வயதான சாரா ஜோடியாக நடிப்பது குறித்து நெட்டிசன்கள் டென்ஷனாகி பலவாறு கருத்துக்களை தெரிவித்துவருகின்றனர். 


ஒரு ரசிகர் வெளியிட்டுள்ள பதிவில், `ரன்வீர் சிங் அறிமுகமான பேண்ட் பாஜா பாரத் படத்தில் நடித்த போது சாராவிற்கு 5 வயது. இப்போது 39 வயதாகும் நிலையில் ரன்வீர் சிங் சாராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கப்போகிறார். இது சரியா?’ என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். வேறு ஒருவர், `இதற்கு ரன்வீர் சிங்கை குறை சொல்ல முடியாது’ என்றும், `படத்தின் தயாரிப்பாளர்களைத்தான் குறை சொல்லவேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளனர். 

Advertisement

Advertisement