• Dec 26 2024

அரசு விதிகளை மதிக்கமாட்டாரா சிவகார்த்திகேயன்? 3வது குழந்தைக்கு நெட்டிசன்கள் கண்டனம்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ள நிலையில் ரசிகர்கள் மற்றும் திரை உலகினர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த காலத்தில் மூன்றாவது குழந்தையா? என சில நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

எத்தனை குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தம்பதிகளின் முழு உரிமை என்றாலும் நாட்டின் ஜனத்தொகையை கருத்தில் கொண்டு அரசு ஒரு குழந்தை போதும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. 

தற்போதுள்ள இளைய தலைமுறை தம்பதிகள் ஒரு குழந்தை, அதிகபட்சமாக இரண்டு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்வதில்லை. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் மூன்றாவது குழந்தை பெற்றுள்ளதை அடுத்து அரசின் விதிகளை அவர் மதிக்க மாட்டாரா? எவ்ளோ பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் அரசின் விழிப்புணர்வை மதித்து இரண்டு குழந்தையோடு நிப்பாட்டி இருக்கலாமே என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். 

ஆனால் இந்த கருத்துக்கு பலர் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர். எத்தனை குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது சிவகார்த்திகேயன் மற்றும் ஆர்த்தியின் தனிப்பட்ட விருப்பம் என்றும் அதில் தலையிட யாருக்கும் உரிமை என்றும் இல்லை என்றும் அது குறித்து விமர்சனம் செய்வது அநாகரிகம் என்றும் தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் சிவகார்த்திகேயனின் மூன்றாவது குழந்தை குறித்த சர்ச்சை சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement