• Feb 27 2025

சிம்புவை காலி பண்ணிய ஆர்யா..? '2018' இயக்குநருடன் அதிரடி கூட்டணி

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகராக திகழ்பவர் நடிகர் ஆர்யா. இவர்  நடிக்கும் படத்தில் எந்தவிதமான ரிஸ்கை எடுக்க  தயாரானவர். அத்துடன் தன்னை யார் என்ன சொன்னாலும் மறுப்பு இல்லாமலும் செய்யக்கூடியவராக காணப்படுகின்றார்.

2005 ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் அறிமுகமான ஆர்யா, அதன் பின்பு அவன் இவன், மதராசபட்டினம், நான் கடவுள், சார்பட்டா பரம்பரை, டெடி என பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவருடைய நடிப்பில் வெளியான காமெடி படங்களும் ரசிகர்களை வெகுவாக  கவர்ந்துள்ளன.

இவர் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு இடையே வயது வித்தியாசம் மிகப்பெரிய பிரச்சினையாக காணப்பட்டது. ஆனாலும் அதையெல்லாம் கடந்து தற்போது ஒரு பெண் குழந்தையும் இவர்களுக்கு உள்ளது.


கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி வெளியான '2018' என்ற  படத்தை இயக்கியவர் ஜூட் ஆண்டனி ஜோசப். இந்தப் படம் இந்திய அளவிலேயே மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு ஜூட் ஆண்டனி ஜோசப் தமிழில் படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், தமிழில் ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கவுள்ள நடிகர் சிம்புவை வைத்து இயக்க இருந்த படம் தற்போது கை மாறி நடிகர் ஆர்யா தான் அந்தப் படத்தில் நடிக்க  உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஆர்யாவின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement