• Oct 26 2024

நித்யா மேனனா வேண்டவே வேண்டாம்.. அலறியடித்து ஓடிய விஜய் சேதுபதி..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படத்தின் நாயகியாக நித்யா மேனனை இயக்குனர் ஒப்பந்தம் செய்ய முயன்ற போது விஜய் சேதுபதி ரொம்பவே யோசித்ததாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் ஆறுமுக குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஏஸ்’. இந்த படம் சீட்டு விளையாட்டு சம்பந்தப்பட்ட கதை அம்சம் கொண்டது என்றும், இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகியாக நடிக்க நித்யா மேனன் இடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போது விஜய் சேதுபதி ரொம்ப யோசித்ததாகவும் நித்யா மேனன் மிக அபாரமாக நடித்து நாயகன் நடிப்பையே பின்னுக்கு தள்ளி விடுவார் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் வரும் தனுஷ் நடிப்பையே பின்னுக்கு தள்ளிவிட்டார் என்று கூறப்பட்ட நிலையில் தான் விஜய் சேதுபதி யோசித்ததாக தெரிகிறது.

ஆனால் இயக்குனர் ஆறுமுககுமார், விஜய் சேதுபதியிடம், நித்யா மேனன் உங்கள் நடிப்பிற்கு சவாலாக இருப்பார் என்றாலும் உங்களால் அவர்கள் ஈடு கொடுக்க முடியும் என்று நம்பிக்கை கொடுத்து அவரை சம்மதிக்க வைத்ததாகவும் இதனை அடுத்து நித்யா மேனன் இந்த படத்தில் நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

ஏற்கனவே விஜய்சேதுபதி மற்றும் நிதியா மேனன் ஆகிய இருவரும் 19(1)(a) என்ற மலையாள படத்தில் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement