• Dec 26 2024

’சிங்கிள் பாடல் மட்டுமல்ல.. இன்னொரு ட்விஸ்ட்டும் இருக்குது.. விஜய் ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

தளபதி விஜய் நடித்து முடித்துள்ள ’கோட்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு அறிவித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.  அதுமட்டுமின்றி இந்த பாடலை விஜய் மற்றும் மறைந்த இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணியின் ஏஐ டெக்னாலஜி குரல் பாடி உள்ளதை அடுத்து இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி நாளை விஜய்யின் பிறந்தநாளில் இந்த சிங்கிள் பாடல் மட்டும் இன்றி கிளிம்ப்ஸ் வீடியோவும் வெளியாக இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயின் தீவிர ரசிகைகளில் ஒருவரான அர்ச்சனா கல்பாத்தி தான் இந்த படத்தின் தயாரிப்பாளர் என்பதால் நாளைய விஜய்யின்  பிறந்த நாள் கொண்டாட்டமாக அவர் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் ‘கோட்’ படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவையும் வெளியிட உள்ளார்.

49 வினாடிகள் கொண்ட இந்த கிளிம்ப்ஸ் வீடியோ ‘கோட்’ நாளை அதிகாலை 12.01 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள ‘கோட்’ படத்தில் விஜய், மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், மோகன், ஜெயராம், சினேகா, லைலா, வைபவ், பிரேம்ஜி, யுகேந்திரன், பார்வதி நாயர், விடிவி கணேஷ், யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.  


Advertisement

Advertisement