• Dec 26 2024

அஜித் படத்துக்கு மட்டும் தான் இந்த மாதிரி கூத்து நடக்கும்.. ‘விடாமுயற்சி’ யை பின்னுக்கு தள்ளும் ‘குட் பேட் அக்லி’!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

தற்போது விஜய்க்கு சமமாக ஹிட் கொடுக்க கூடிய நடிகர்கள் அஜித் மட்டுமே ஆவார். எந்த பின்னணியும் இன்றி சினிமாவுக்குள் வந்த இவர், பல ஹிட் படங்களை கொடுத்து வந்தாலும் சமீபத்தில் இவரது சில படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றன. 

ஏனைய நடிகர்களை போல் அவார்ட் ஷோவ்கள், அரசியல் நிகழ்ச்சிகள் என எதிலும் ஈடுபடாமல், தனக்கு பிடித்த கார் ரேஸ்கள், பைக் ரெய்டுகல் போன்ற  விடயங்களில் ஆர்வம் காட்டி வருகின்றார். ரசிகர் மன்றம் தேவையில்லை என அதை களைத்த ஒரே நடிகரும் இவர் ஆவார்.


நடிகர் அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில், அவரின் அடுத்த படத்தின் பெயர் "குட் பேட் அக்லி" என அறிவிக்கப்பட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. 


இந்த நிலையில், தற்போது நடிகர் அஜித் பைக் ரெய்டு சென்றதால்  விடாமுயற்சி படப்பிடிப்பு இடையில் நிறுத்தப்பட்டுள்ளது. 

ஆனால் குட் பேட் அக்லி படம் 2025 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளது என்றும், விடாமுயற்சிக்கு படத்திற்கு முன்னராகவே வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement