• Dec 26 2024

ஹோலி பண்டிகை தான் ரஜினிக்கு இன்னொரு பிறந்த நாள்.. பாலசந்தரால் தோன்றிய அவதாரம்..!

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

சினிமா பின்னணியும், அழக்கான தோற்றமும்,  நிறமும் என அந்த காலத்தில் சினிமாவுக்கான தகுதிகள் என பார்க்கப்பட்ட நிலையில், இவை எதுவும் இன்றி தனது திறமையினாலும் தனது உழைப்பினாலும் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்ப்படுத்திக்கொண்டவர் தான் ரஜினிகாந்த்.

தமிழ்சினிமாவின் சிகரமாக இன்றுவரை இருக்கும் இவர். 80s , 90s , 2k  என பல ஜெனரேஷன்களை கடந்த ரசிகர் பட்டாளத்தைக்கொண்டவர் ஆவார். பலர் சினிமா துறையில் வருவதற்கு முன்னுதாரணமாக இருக்கும் இவரின் திரைப்படமான "2.0" தான் இன்றளவிலும் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாகவும் இருந்து வருகிறது.

இந்த நிலையில், 1975ம் ஆண்டு சூப்பர் ஸ்டாருக்கு பெயர் சுட்டப்பட்ட நாள் இன்றாகும் என தகவல் வெளியாகி உள்ளது.



அதாவது, இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியாகிய "அபூர்வ ராகங்கள்" திரைப்படத்திலேயே இவர் அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்க்காகவே "சிவாஜிராவ் கெய்க்வாட் "என்ற தனது பெயரை ரஜனிகாந்த் என்ற சினிமாப்பெயராக மாற்றிக்கொண்டார். 1975 ஆம் ஆண்டு ஹோலி பண்டிகை தினத்தில்  இயக்குனர் கே .பாலசந்தரால்  இந்த பெயர் சூட்டப்பட்டது.


இவ்வாறு பல சாதனைகளை செய்யும் இவரது உண்மையான பெயர் சிவாஜிராவ் கெய்க்வாட் என்றும் படத்திற்க்காகவே ரஜினிகாந்த் என்று பெயர் மாற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement