• Jan 18 2025

எதிர்பாராத விபத்தில் சிக்கி உயிரிழந்த யூடியூபர் ராகுல்.. பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

Aathira / 5 hours ago

Advertisement

Listen News!

தற்போதைய காலகட்டத்தில் சமூக வலைத்தள பக்கங்களில் நகைச்சுவை, பாட்டு, நடனம், கூத்து, சமையல் என பலரும் தங்களுடைய திறமைகளை வெளி உலகத்திற்கு மிக எளிமையாகவே வெளிக்காட்டி வருகின்றார்கள். இதனால் அவர்களும் சினிமா பிரபலங்களைப் போலவே மக்கள் மத்தியில் பிரபலமாக காணப்படுகின்றார்கள்.

அவ்வாறு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் யூட்யூபர் ராகுல் டிக்கி. இவருடைய நகைச்சுவை வீடியோக்களை பார்த்து சிரிக்காத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைப்பதில் கைதேர்ந்தவர் ஆக காணப்படுகின்றார்.

இந்த நிலையில், ரசிகர்களை சிரிக்க வைத்து மகிழ்ந்த ராகுல் நேற்று இரவு இடம் பெற்ற சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். இந்த தகவல் அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தற்போது இவருடைய மரணத்திற்கு பலரும் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றார்கள்.


இவர் ஈரோட்டில் வசித்து வரும் கவுந்தம்பாடி என்ற இடத்தில் உள்ள பாலத்தினால் வந்து கொண்டிருக்கும் போது விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ராகுல் விபத்தில் சிக்கி உயிரிழந்த  புகைப்படமும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சமீபத்தில் ராகுல் வழங்கிய பேட்டியில், நான் பாலிடெக்னிக் படித்துக் கொண்டிருந்தபோது அம்மாவை எனது அப்பா பிரிந்துவிட்டார்.


அதன் பின்பு செருப்பு கடை, சாக்கடையை சுத்தம் செய்வது என பல வேலைகள் செய்துள்ளேன். என்னுடைய கனவே அம்மாவை சந்தோஷமாக பார்க்க வேண்டும் என்பதுதான். குடிசையா இருந்தாலும் அது சொந்த வீடா இருக்க வேண்டும் என பேசிருந்தார். 

இதேவேளை, இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணமும் நடைபெற்று உள்ளது. இவருடைய மனைவியை ஏற்ற செல்லும் போதே குறித்த விபத்து இடம்பெற்று உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement