• Dec 26 2024

பா ரஞ்சித்தின் அடுத்த படத்தின் டைட்டில்.. அதிரடியாக களத்தில் இறங்கிய இயக்குநர் பா ரஞ்சித்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான ’தங்கலான்’ திரைப்படம் ரிலீஸ்-க்கு தயாராகி சில மாதங்கள் ஆன நிலையிலும் இன்னும் ரிலீசாகாமல் உள்ளது. இந்த படத்தை சரியான தேதியில் போட்டியில்லாமல் ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய பா ரஞ்சித் திட்டமிட்டிருப்பதாகவும் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் ’தங்கலான்’ ரிலீஸ் ஒரு பக்கம் இருக்க, பா ரஞ்சித் தனது அடுத்த படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகிறார் என்றும் ஏற்கனவே இந்த படத்தில் அட்டகத்தி தினேஷ் நாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த படத்திற்கு ’வேட்டுவம்’ என்ற டைட்டில் வைக்க பா ரஞ்சித் திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் டைட்டில் உடன் கூடிய புதிய போஸ்டர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

அட்டகத்தி தினேஷ், ஆர்யா, மட்டுமின்றி இந்த படத்தில் அசோக் செல்வன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் தொடங்கும் என்றும் இந்த படத்தில் மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாகவும் மூன்று முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

அட்டகத்தி தினேஷ், ஆர்யா மற்றும் அசோக் செல்வன் ஆகிய மூன்று பிரபலங்கள் ஒரே படத்தில் இணைத்து, அதற்கு வேட்டுவம் என்று பா ரஞ்சித் தலைப்பு வைத்துள்ள நிலையில் இந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement