• Dec 25 2024

நான்காம் நாள் வசூலில் மரண அடிவாங்கிய பிளடி பெக்கர்.! ஆனாலும் ஹிட் கொடுத்த கவின்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான மூன்று படங்களுமே வித்தியாசமான கதை அம்சங்களை கொண்டுள்ளன. அதில் அமரன் திரைப்படம் சக்கைப் போடு போட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து பிளடி பெக்கர் திரைப்படமும் பிரதர் திரைப்படம் ஓரளவு வசூலில் தடுமாறி வருகின்றன.

இதை தொடர்ந்து கவின் நடிப்பில் வெளியான பிளடி பெக்கர்  படத்தில் கவினுடன் ராதா ரவி, ரேடின் கிங்ஸில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் யாசகர் கெட்டப்பில் கவின் நடித்துள்ளார். நெல்சன் திலிப் குமார் முதல் முறையாக இயக்கிய படம் இதுவாகும்.

d_i_a

தீபாவளிக்கு வெளியான திரைப்படங்களில் குறைந்த பட்ஜெட் உடைய படமாக காணப்படுவது கவின் நடிப்பில் வெளியான பிளடி பெக்கர் படம் தான். அமரன் படத்திற்கு அடுத்தபடியாக அதிகளவு தியேட்டர்களில் கவின் படம் வெளியானது. இந்த படத்தின் 80 சதவீத காட்சிகள் ஒரு பெரிய பங்களாவில் மட்டுமே நடைபெறுகின்றது.


இந்த நிலையில், கவின் நடிப்பில் வெளியான பிளடி பெக்கர் படத்தின் நான்காவது நாளுக்கான வசூல் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி உலக அளவில் சுமார் ஒரு கோடி ரூபாய் வசூல் தான் இந்த படம் பெற்றுள்ளதாம். இதனால் நான்காவது நாளில் சரிவை சந்தித்துள்ளது பிளடி பெக்கர்.

ஆனாலும் சுமார் பத்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் இதுவரையில் 12 கோடி வரை வசூலித்துள்ளதாம். இதனால் வசூல் ரீதியாக ப்ளடி பெக்கர் திரைப்படம் ஹிட் படமாக காணப்படுகின்றது.

Advertisement

Advertisement