• Dec 27 2024

என் முதல் காதலனே என்னை ஏமாற்றிவிட்டான்.. பலருடன் டேட்டிங்.. ஒருவருடன் திருமணம்.. அஜித் பட நாயகி..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

.நடிகை வித்யாபாலன் நடித்த பாலிவுட் திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் என்னுடைய முதல் காதலனே என்னை ஏமாற்றி விட்டான் என்றும் அதன் பிறகு சிலருடன் டேட்டிங் சென்ற நான் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

வித்யாபாலன் முக்கிய வேடத்தில் நடித்த ’அவுர் தோ பியார்'  என்ற படம் வரும் 19ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் வித்யா பாலனுடன் இலியானா, பிரதிக் காந்தி, செந்தில் ராமமூர்த்தி  உட்பட பலர் நடித்துள்ள நிலையில் இந்த படம் ரொமான்ஸ் படம் என்பதால் இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் தன்னுடைய முந்தைய காதல் குறித்து வித்யா பாலன் பேசினார்.



நான் முதல் முதலாக கல்லூரியில் படிக்கும் போது ஒரு பையனை காதலித்தேன், ஆனால் அவன் திடீரென என்னை பிரேக்கப் செய்துவிட்டு அவனது முன்னாள் காதலியுடன் சென்றுவிட்டான். அந்த நாளில் நான் மிகவும் நொறுங்கி விட்டேன், ஆனால் இப்போது நான் வாழ்க்கையில் சிறப்பாக இருக்கிறேன் என்றால் அந்த முதல் காதலன் என்னை ஏமாற்றிய போது எனக்கு இருந்த உத்வேகம் தான். வாழ்க்கையில் ஜெயித்து காட்ட வேண்டும் என்ற வெறி தான் என்று அவர் கூறினார்.

நான் அடிக்கடி டேட்டிங் செல்பவர் இல்லை என்றாலும் சிலருடன் டேட்டிங் சென்றது உண்மைதான், ஆனால் நான் சீரியஸாக அதிக நாட்கள் டேட்டிங் சென்றவரே திருமணம் செய்து கொண்டு தற்போது வாழ்க்கையில் நிம்மதியாக இருக்கிறேன் என்று அந்த விழாவில் வித்யா பாலன் பேசினார்.

தயாரிப்பாளர் சித்தார்த் ராய் என்பவரை கடந்த 2012 ஆம் ஆண்டு வித்யா பாலன் திருமணம் செய்து  கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை வித்யா பாலன் தமிழில் அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’  என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement