• Dec 26 2024

முதலிரவு அன்று தூங்கிய ’மண்டு’ தங்கமயில்.. கதறி கதறி அழுததால் சரவணன் அதிர்ச்சி.. காலையில் கலவரம்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’  சீரியலில் இன்று பாண்டியன் தனது மகன் சரவணனுக்கு தனது அறிவுரையை தொடர்ந்து கொண்டே இருக்கிறார். அவரை அழைத்துச் செல்ல வந்த செந்தில், கதிர் ஆகிய இருவரும் சரவணன் பரிதாபத்தை பார்த்து சோகமாகி உள்ளனர். அப்போது அங்கு வரும் கோமதி இடம் ’நீ போய் சரவணன் கூட்டிட்டு வா’ என்று பழனியப்பன் சொல்ல, அப்போது ’வேண்டாம், அப்பா யாரிடமாவது பேச வேண்டும் என்று நினைக்கிறார், என்று கதிர் கூறி அம்மாவை உள்ளே அனுப்பி வைக்கிறார்.

இந்த நிலையில் தங்கமயில் முதலிரவு அறையில் நீண்ட நேரம் காத்திருக்கிறார், பூக்கள் அலங்காரத்தை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது சரவணனை அவரது தம்பிகள் இருவரும் அழைத்து வருகின்றனர். கேலியும் கிண்டலுமாக உள்ளே சரவணனை அனுப்பிய நிலையில் உள்ளே போன சரவணனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தங்கமயில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். ஒருவேளை அசதியில் தூங்கி இருக்கலாம் என்று நினைத்த சரவணன் லைட்டை ஆப் செய்து விட்டு படுத்து விடுகிறார்.



இந்த நிலையில் நள்ளிரவில் திடீரென விழிக்கும் தங்கமயில் பக்கத்திலிருந்த சரவணன் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். உடனே லைட்டை போட்டு ’அய்யய்யோ நாம் தெரியாமல் தூங்கிவிட்டோமே, நம்மை பற்றி மாமா என்ன நினைப்பார், மண்டு மண்டு ஏன் இப்படி தூங்கினேன், அம்மாதான் சொல்லிவிட்டார்களே என்று தனக்குத்தானே புலம்பி கொண்டு அழுகிறார்.

இதனை அடுத்து அழுகை சத்தத்தை கேட்டு சரவணன் விழித்து, ‘ஏன் அழுகிறாய் என்று பதறுகிறார் , அப்போதுதான் தங்கமயில் ’தெரியாமல் தூங்கி விட்டேன், கல்யாணத்துக்கு முந்தின நாளும், அதற்கு முந்தின நாளும் நான் தூங்கவில்லை, அசதியாக இருந்ததால் சும்மா படுத்து இருந்தேன், ஆனால் நான் தூங்கி விட்டேன் என்று கூற ’பரவாயில்லை உனக்கு அசதியாக இருந்தால் தூங்கு’ என்று சரவணன் கூறுகிறார்.

இதனை அடுத்து கோமதி காலையில் எழுந்து வரும்போது ஹாலில் மீனா தூங்குகிறார், இதனை அடுத்து சரி நாமே கோலம் போடலாம் என்று கோமதி வெளியே சென்று பார்க்கும் போது கோலம் தயாராக உள்ளது, இதனை எடுத்து காபி டீ போடலாம் என்று பார்த்தால், அதுவும் தயாராக உள்ளது. அதுமட்டுமல்ல டிபனும் தயாராக உள்ளது.

அப்போது அங்குவரும் ராஜியை பார்த்து ’நீதான் இதை எல்லாம் செய்தாயா’ என்று கேட்க, ’நான் செய்யவில்லை, மீனா அக்கா செய்திருப்பார்கள்’ என்று கூற, தூங்கி எழுந்து மீனா, ’நானும் செய்யவில்லை’ என்று கூறுகிறார்.

அப்போதுதான் தங்க மயில் பூஜை அறையில் சாம்பிராணி போட்டு கொண்டு வரும் நிலையில் ’நான் தான் எல்லாவற்றையும் செய்தேன், காலை 4 மணிக்கே எழுந்து எல்லாம் செய்து விட்டேன்’ என்று கூற, மீனாவும் ராஜியும் அதிர்ச்சி அடைவதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement