• Dec 26 2024

மீனா, ராஜி மீது சந்தேகப்பட்ட கதிர்.. ஒருவழியாக முடிந்த சரவணன் - தங்கமயில் கல்யாணம்..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்று ஒரு வழியாக தங்களை கடத்தியவர்களிடமிருந்து தப்பித்து மண்டபத்துக்கு வரும் மீனா மற்றும் ராஜி, பாண்டியன் மற்றும் கோமதி கேட்கும் கேள்விகளுக்கு சமாளித்தாலும் கதிர் அவர்கள் இருவரையும் சந்தேகப்படுகிறார். அதன் பின்னர் சரவணன் - தங்கமயில் திருமணம் சடங்குகளோடு முடிந்து பெரியவர்களுடன் ஆசீர்வாதம் வாங்கும் காட்சிகளுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

’பாண்டியன் ஸ்டோர் 2’ சீரியலில் இன்று தங்களை கடத்தியர்களிடம் இருந்து தப்பித்து வரும் மீனா மற்றும் ராஜி மண்டபத்திற்கு வந்தபோது பாண்டியன், கோமதி ஆகிய இருவரும் அவர்கள் மீது கோபிக்கின்றனர். இதுவரை எங்கே சென்றீர்கள்? உங்களை தேடி நாங்கள் பதறிப் போய் விட்டோம்? யாரிடமாவது சொல்லிட்டு போயிருக்கலாமே என்று பாண்டியன் கூட அப்படி எங்கடி போனீங்க என்று கோமதியும் உரிமையாக கேட்கிறார்.

அப்போது தங்கமயில் நகைகளை வீட்டில் வைத்து விட்டோம், அதை எடுக்கத்தான் போனோம் என்று மீனா சொல்லி சமாளிக்க ராஜியும் அதற்கு ஆமாம் போடுகிறார். யாரிடமாவது சொல்லிவிட்டு போயிருக்கலாமே என்று கோமதி கூற அப்போது திடீரென ராஜி சித்தப்பாவிடம் சொல்லிட்டு தான் போனோம் என்று அவர் மீது பழியை தூக்கிப் போட, அவர் திரு திரு என்று விழிக்கிறார். இதனை அடுத்து பாண்டியன் அவரை திட்டும் காட்சி உள்ளது



அதன் பின்னர் தங்கள் அறைக்கு மீனா, ராஜி செல்லும் போது பின்னாடியே வரும் கதிர் ’எனக்கு சந்தேகமாக இருக்குது, நீங்கள் வீட்டுக்கு போனது போல் தெரியவில்லை’ என்று கூற அதற்கு மீனா ’நாங்கள் வீட்டிற்குத்தான் சென்றோம் ,நகை எடுக்க சென்றோம், என்று கூற, வீட்டின் சாவி என்னிடம் இருக்கும் போது நீங்கள் எப்படி நகையை அங்கே போய் எடுக்க போயிருப்பீர்கள் என்று கதிர் மடக்குகிறார். அதன் பிறகு திருதிருவென விழிக்கும் மீனா, ராஜி,  தோட்ட கதவு பூட்டி இருக்கிறதா என்று பார்க்க போனோம் என்று கூறி சமாளிக்கின்றனர்.

அடுத்தடுத்து சந்தேகத்துடன் கேள்விகளை கதிர் கேட்டுக் கொண்டிருக்கும் போது மீனா ’இப்போது நாங்கள் திரும்ப கல்யாணத்துக்கு ரெடி ஆக வேண்டுமா? வேண்டாமா? சின்ன குழந்தை போல் எங்களை மிக்க வைத்து கேள்வி கேட்கிறீர்கள்? என்று அதட்ட அதன்பின்னர் வேறு வழியில்லாமல் ’சரி ரெடி ஆகுங்கள்’ என்று கூறிவிட்டு கதிர் செல்கிறார்.

அதன்பின்னர் தங்கமயில் கழுத்தில் சரவணன் தாலி கட்டி ஒரு வழியாக கல்யாணத்தை முடிக்கிறார்கள்.   சரவணன் பெற்றோரும் தங்கமயில் பெற்றோரிடம் ஆசி வாங்கிய பிறகு பானையில் உள்ள மோதிரத்தை எடுக்கும் போட்டி நடக்கிறது. அதில் தங்கமயில் வெற்றி பெற்று விட அனைவரும் சந்தோஷத்தோடு சிரிக்கும் காட்சிகளுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement