• Dec 26 2024

பாண்டியன், சரவணனிடம் ஏத்திவிட்ட தங்கமயில்.. வில்லியாக மாறி குடும்பத்தில் குழப்பம்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்றைய எபிசோடில் செந்தில் இடம் பாண்டியன் போன் செய்து சில வேலைகளை முடிக்க செய்கிறார். ஆனால் மீனாவிடம் சீக்கிரம் வருவதாக செந்தில் வாக்குறுதி அளித்திருந்த நிலையில், மீனாவிடம் பதில் சொல்ல முடியாமல் தர்ம சங்கடத்தில் உள்ளார்.

இந்த நிலையில் சரவணனுக்கு சாப்பாடு எடுத்து செல்லும் தங்கமயில்  சமயம் பார்த்து ’அத்தை தன்னிடம் கோபப்பட்டார்கள் என்றும், கதிர் தம்பியும் கோபப்பட்டார் என்றும் ஏத்தி விடுகிறார். ஆனால் கதிர் அப்படி செய்ய மாட்டான், அம்மாவும் அப்படி செய்ய மாட்டார் என்று சரவணன் சொல்ல, இல்லை என்னிடம் கோபப்பட்டார்கள், நீங்கள் கதிர் தம்பியை கேட்க வேண்டும், அண்ணியிடம் இப்படி நடந்து கொள்ளக் கூடாது என்று சொல்ல வேண்டும் என நீலிக்கண்ணீர் வடிக்க அதை நம்பிய சரவணன் கதிரிடம் பேசுகிறேன் என்று கூறுகிறார்.



இதையடுத்து பாண்டியனிடம் செல்லும் தங்கமயில் சமயம் பார்த்து அவரிடமும் கோமதி குறித்து குறை சொல்கிறார். அத்தை தன்னிடம் கோபப்பட்டார்கள் என்றும், உங்களுக்கு தெரியாமல் ஒரு விஷயம் நடக்கக்கூடாது என்று சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றும் கூற பாண்டியனும் தங்கமயில் விரித்த வலையில் விழுந்து கோமதி உடன் பேசுவதாக சொல்கிறார். பாண்டியன் இடம் தங்கமயில் ஏற்றி விடுவதை பழனி மட்டும் கவனித்து அதிர்ச்சி அடைகிறார்.

 இந்த நிலையில் செந்திலை காணாமல் மீனா அறையில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் தன்னால் ஒரு வேலையை முடிக்க காலதாமதம் ஆகிவிட்டது என்றும் ஒரு மணி நேரத்தில் வருகிறேன் என்றும் வாக்குறுதி அளிக்கிறார். இந்த நிலையில் தான் ராஜி மீனாவுக்கு போன் செய்து டியூஷன் விஷயத்தை கூற, இருவரும் மாமாவுக்கு புரிதலே இல்லை என்று பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது கோமதியும் தங்கமயில் குறித்து மீனாவிடம் குறை கூறும் காட்சிகள், மீனா இந்த விஷயத்தை எப்படி சமாளிக்க போறோம் என்று ஆதங்கத்துடன் இருக்கும் காட்சியுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

Advertisement

Advertisement