• Dec 26 2024

இது உரிமை போராட்டம்.. கோமதியை ஏத்திவிடும் மீனா, ராஜி.. தங்க மயிலுக்கு ஆப்பு ரெடி..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்று மீனாவையும் செந்திலையும் ஹோட்டலில் பார்த்த ஆத்திரத்தில் பாண்டியன் கடையில் வந்து உட்கார்ந்திருக்கும்போது செந்தில் வருகிறார். அப்போது ’எங்கே போய் வந்தாய் ’ என்று கேட்க ’டெலிவரிக்கு போனேன் லேட் ஆகிவிட்டது’ என்று செந்தில் கூற ’பொய் சொல்ல எப்படி கற்றுக் கொண்டாய், நீயும் மீனாவும்ஹோட்டலில் போய் சாப்பிட்டுவிட்டு டெலிவரிக்கு போனேன் என்று பொய் சொல்கிறாயா, இது என்ன பழக்கம், தொழிலில் அக்கறையுடன் வேலை பார்த்தால் முன்னேற முடியும், இப்படி ஓட்டல் ஓட்டலாக போய் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் எப்படி முன்னேற முடியும்’ என்று பயங்கரமாக திட்டுகிறார்.

இதனை அடுத்து அதிர்ச்சி அடைந்த செந்தில் தனது தாத்தாவிடம் ’மனைவியை அழைத்துக்கொண்டு வெளியே செல்வது தப்பா? நான் இவரிடம் தான் அனுமதி கேட்டேன், அவர் அனுமதி கொடுத்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காதே, அடுத்தவங்க மனது புண்படும்படி ஏன் இப்படி பேசுகிறார்’ என்று புலம்புகிறார்.

இதனை எடுத்து பாண்டியன், செந்தில் வீட்டுக்கு வரும்போது கோமதி அவர்களிடம் ’ஏன் சோர்வாக இருக்கிறீர்கள்’ என்று விசாரிக்க போது ’வேலை அதிகமாக இருக்கிறது என்று செந்தில் சொல்ல அப்போது பாண்டியன் மீண்டும் திட்டுகிறார் .செந்தில் திட்டுவதை பார்த்த தங்கமயில் சிரிக்க அனைவரும் அவரை ஒரு மாதிரியாக பார்க்கின்றனர்.



இதனை அடுத்து டைனிங் டேபிளில் அனைவரும் சாப்பிட உட்காரும்போது ’நானே சமைத்தேன், நானே பரிமாறுகிறேன்’ என்று தங்கமயில் தற்பெருமை பேச, கோமதி தற்போது கடுப்படைகிறார். அதன் பிறகு ’நீ போய் உட்காரு, நான் பரிமாறுகிறேன்’ என்று கோமதி சொல்ல,  வேண்டாம், சமைத்த எனக்கு பரிமாற தெரியாதா? என கேட்க அதற்கு கோமதி கொஞ்சம் கடுப்பாக போ என கூற வேண்டாவெறுப்பாக தங்கமயில் உட்காருகிறார்.

இந்த நிலையில் பாண்டியன், தங்கமயில் சமைத்த சாப்பாட்டை புகழ, கோமதி கடுப்பாகிறார். மீனாவிடம் ராஜியிடமும் ’உங்களால் இப்படி எல்லாம் சமைக்க முடியுமா’ என்று கேட்டு ’ஒருவர் நன்றாக சமைத்தால் அவரை பாராட்ட வேண்டும், பொறாமைப்படக்கூடாது’ என்று மீனாவிடம் சொல்கிறார்.

அப்போது மீனா ’இந்த சாதாரண வீட்டு வேலை செய்வதற்கெல்லாம் நான் எதற்கு பொறாமைப்படுகிறேன்’ என்று பதிலடி கொடுக்க பாண்டியனும் அமைதியாகிறார். இதை பார்த்து தங்கமயில் கடுப்பாகிறார். இந்த நிலையில் கிச்சனில் கோமதி டம் டும் என்று பாத்திரத்தை போட்டு உடைக்க, மீனா மற்றும் ராஜி ஆகிய இருவரும் அவரை ஏத்தி விடுகின்றனர்.

30 வருடமாக நீங்க இங்கே சமைக்கிறீர்கள், உங்களை ஒரு நாள் கூட மாமா பாராட்டவில்லை, ஆனால் நேத்து வந்த தங்கமயிலை பாராட்டுகிறார், இதை சும்மா விடக்கூடாது, இது உரிமை போராட்டம், உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம்’ என மீனா, ராஜி சொல்ல, அதேபோல்  எங்களுக்கும் ஆதரவாக நீங்கள் இருக்க வேண்டும்’ என்று ஒரு கூட்டம் நடத்துகின்றனர்.

அப்போது கோமதியும் ஆவேசமாக ’இனிமேல் அவர் என்னிடம் ஏதாவது கேட்கட்டும், அப்போ இருக்குது’ என்று சொல்ல அப்போது பாண்டியன் ’தங்கமயில் தங்கமயில்’ என்று கூப்பிட கோமதி அதிர்ச்சி அடைவதுடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்துள்ளது.

Advertisement

Advertisement