• Dec 26 2024

கமல் படத்தில் திடீரென இணைந்த ஷோபனா மற்றும் மிருணாள் தாக்கூர்.. செம்ம கேரக்டர்..!

Sivalingam / 6 months ago

Advertisement

Listen News!


உலகநாயகன் கமல்ஹாசன் படத்தில் திடீரென நடிகை ஷோபனா மற்றும் மிருணாள் தாக்கூர் இணைந்துள்ளதாக கூறப்படும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2’ திரைப்படம் ரிலீஸ்-க்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படம் ஜூலை 12ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடித்த இன்னொரு திரைப்படம் ’கல்கி 2898 ஏடி’ என்பதும் இந்த படத்தில் அவர் வில்லனாக நடித்துள்ள நிலையில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்பட பலர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த படமும் கிட்டத்தட்ட ரிலீசுக்கு தயாராகி உள்ளது என்பதும் வரும் ஜூன் 27ஆம் தேதி அதாவது ’இந்தியன் 2’ படத்திற்கு முன்பே இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிகை ஷோபனா மற்றும் மிருணாள் தாக்கூர் ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் அதேபோல் துல்கர் சல்மான் மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகிய இருவரும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. திடீரென இந்த படத்தில் நான்கு பிரபலங்கள் இணைந்துள்ளார்கள் என்ற தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement