• Jun 08 2025

பாலிவுட்டில் மாஸ் காட்டும் பரியேறும் பெருமாள் திரைப்படம்! வாழ்த்து கூறும் சினிமா ரசிகர்கள்!

Nithushan / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வேறு மொழி திரைப்படங்களை ரிமேக் செய்தே எடுக்கப்படுகின்றது. ஆனால் தமிழ் திரைப்படமான பரியேறும் பெருமாள் திரைப்படத்தை ரீமேக் செய்து பாலிவுட் திரைப்படம் ஒன்று எடுக்கப்படுகின்றது.


 பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் கதிர், ஆனந்தி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உருவாகிய திரைப்படம் பரியேறும் பெருமாள் ஆகும் . இத்திரைப்படத்தினை மாரி செல்வராஜ் இயக்கியதுடன் அவர் இயக்கும் முதல் திரைப்படம் இதுவாகும். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைதுமிருந்தார்.


இந்த நிலையிலேயே சித்தார்த் சதுர்வேதி , த்ரிப்தி இம்ரி நடிப்பில் 'தடக் 2' பட அறிவிப்பு வெளியானது. இது தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' படத்தின் தழுவலாக உருவாகிறது. இதன் முதல் பாகமான 'தடக்', நாகராஜ் மஞ்சுளே இயக்கிய 'சாய்ராத்' படத்தின் இந்தி ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement