• Dec 27 2024

புகைப்பட கலைஞராக மாறிய அந்நியன் பட ஹீரோயின்! தனது போட்டோக்கு கிடைத்த அங்கீகாரத்தை பார்த்து மகிழ்ச்சி !

Nithushan / 5 months ago

Advertisement

Listen News!

சினிமா துறையில் ஒரு காலத்தில் கொடிகட்டி பரந்த பிரபலமாக இருந்துவிட்டு தங்களுக்கு பிடித்த வேறு துறையை தேர்ந்தெடுப்பவர்களும் உள்ளனர். அவ்வாறே தமிழ் சினிமாவில் கொடிகட்டி பரந்து தற்போது புகைப்பட கலைஞராக இருக்கிறார் நடிகை சதா.


சதா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தாய்மொழி மராத்தி மொழியானாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த அன்னியன் தமிழ்த் திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றிப்படமாகும்.


இவ்வாறான இவர் சமீபத்தில் திரைப்படங்கள் நடிப்பதை குறைத்துவிட்டு போட்டோக்கள் எடுப்பதில் ஆர்வம் காட்டி வருவதுடன் வனவிலங்கு புகைப்பட கலைஞராக காணப்படுகின்றார். இவ்வாறான இவர் எடுத்த புகைப்படமானது NIKKON INDIA COFFEE TABLE BOOK -இல் இடம்பெற்றதை பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளார்.


Advertisement

Advertisement