• Dec 27 2024

தயவு செஞ்சு Captain-அ பத்தி இப்படியெல்லாம் பேசாதீங்க... கணவரைக் கட்டியணைத்தபடி போட்டோ வெளியிட்ட விஜயகாந்தின் மனைவி

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே, உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், தொடர்ந்து ஓய்வில் இருக்கிறார். கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர், விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு தொடர்ந்து நுரையீரல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகிருந்தது.


மேலும் இதற்காக மருத்துவமனையில் தங்கி 14 நாட்கள் சிகிச்சை எடுக்க வேண்டும் என மருத்துவமனை வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியது.பல பிரபலங்களும் நேரில் சென்று விஜயகாந்தை நலம் விசாரித்து வருகின்றனர். அதனால் மருத்துவமனைக்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருக்கிறது என்றும் தகவல் வெளியாகிருந்தது.


இந்த நிலையில் தற்பொழுது இது குறித்து விஜயகாந்தின் மனைவி ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் “கேப்டன் ஆரோக்கியமாக இருக்கிறார். வெகு விரைவில் கேப்டன் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்புவார், நம் அனைவரையும் சந்திப்பார்.  யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்! என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.விஜயகாந்துடன் எடுத்த புகைப்படமும் தற்பொழுது வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது




Advertisement

Advertisement