• Dec 26 2024

இளம் பெண்ணுடன் டேட்டிங்கில் இருக்கும் நடிகர் சிம்பு- அடடே இவரைத் தான் காதலிக்கின்றாரா?- வைரலாகும் போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் வாரிசு நடிகர் என்ற அடையாளத்தோடு அறிமுகமாகியவர் தான் நடிகர் சிம்பு.கடந்த 2002-ம் ஆண்டு வெளியான 'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகினார்.பின்னர் இவர் நடிப்பில் வெளியான தம், அலை, குத்து, கோவில், மன்மதன், தொட்டி ஜெயா, சரவணா, வல்லவன் என வரிசையாக படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

பல படங்களில் நடித்து பிரபல்யமானாலும் காதல் சர்ச்சையிலும் அடிக்கடி சிக்கி வருகின்றார். நடிகை நயன்தாரா,ஹன்சிகா என முன்னணி நடிகைகள் பலருடனும் காதல் சர்சையில் சிக்கியவர்.அடுத்தடுத்த காதல் தோல்வி மற்றும் பல்வேறு சர்ச்சைகளால், சில வருடம் சினிமாவில் ஆர்வம் காட்டாமல் இருந்த சிம்பு மாநாடு படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.


தற்போது ஏற்றிய எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். சிம்புவின் 48-ஆவது படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்க, ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. 

இந்நிலையில் நடிகர் சிம்பு காதலிக்கிறாரா? என்கிற சந்தேகத்தை எழுப்பியுள்ளது, சிம்பு இளம்பெண் ஒருவருடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் . இந்த லேட்டஸ்ட் புகைப்படம் வெளிநாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. 


எப்போது சிம்பு திருமணம் செய்து கொள்வார் என தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் ரசிகர்களுக்கு அடுத்த வருடத்திலாவது திருமணம் குறித்த குட் நியூஸ் சொல்லுவாரா சிம்பு என ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement